menu






 சிறுவர் பக்கம் >> ஈசாப் குட்டிக் கதைகள

நாயும் ஓநாயும் :

பசியால் வாடி மெலிந்த ஓநாய் தின்பதற்கு ஏதாவது அகப்படுமா என்று தேடிக்கொண்டு காடு முழுவதும் சுற்றியது. அப்பொழுது புஷ்டியான ஒரு நாய், குஷியாக எதிரே ஓடி வந்தது. அந்த நாயைத் தின்றுவிடலாமா என்று ஓநாய் யோசித்தது. ஆனால் தான் அப்பொழுது இருந்த மெலிவான நிலையில் அந்த நாயுடன் சண்டை போட்டுத் தோற்கடிக்க முடியுமா என்பது சந்தேகமாய் இருந்தது. அதனால் அத்துடன் நட்பாய்ப் பேச ஆரம்பித்தது; நாயின் புஷ்டியையும் அழகையும் புகழ்ந்தது. புகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்த நாய் ஓநாயைப் பார்த்து "நண்பனே, நான் சொல்லுகிறபடி செய்தால் நீயும் என்னைப் போல செளக்கியமாய்ப் புஷ்டியுடன் இருக்கலாம். பசியாலும் பட்டினியாலும் இந்தக் காட்டில் இருந்து ஏன் கஷ்டப்படுகிறாய்? என்னுடன் வெளியே வந்து விடு. நல்ல தீவனம் உனக்குக் கிடைக்கும்" என்று சொன்னது.

ஓநாய் : அப்படியானால் நான் என்ன வேலை செய்ய வேண்டும்?

நாய் : வேலையாவது கீலையாவது; ஒன்றுமே கிடையாது. வீட்டுக்கு வருகிற பிச்சைக்காரர்களை விரட்டியடிக்க வேண்டும். வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலைக் குழைக்க வேண்டும். அவ்வளவு தான். அதற்குப் பதிலாக விதவிதமான உணவுகள் கிடைக்கும். பி¡¢யமாக நமது தலையை வீட்டுக்காரர்கள் தடவிக் கொடுப்பார்கள். என்ன செளக்கியம் தொ¢யுமா?

நாய் செய்த வர்ணனையைக் கேட்டு ஓநாய் சொக்கிப் போயிற்று. நாயுடன் காட்டை விட்டு நாட்டுக்குப் போகச் சம்மதித்தது. இரண்டும் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தன. போகும்போது நாயின் கழுத்தில் இருந்த கறுப்பு வாரைக் காட்டி "என்ன அது?" என்று ஓநாய் கேட்டது.

நாய் : அது ஒன்றுமில்லை

ஓநாய் : ஒன்றுமில்லை என்றால் அது எப்படி ஏற்பட்டது?

நாய் : என்னைக் கட்டிப் போடும்போது கழுத்தில் மாட்டுகிற சங்கிலியால் ஏற்பட்ட வடு அவ்வளவு தான்.

ஓநாய் : கட்டிப் போடுகிறார்களா? அப்படியானால் உன் இஷ்டப்படி எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே போக முடியாதா?

நாய் : எப்பொழுதும் போக முடியாது. அது என்ன பிரமாதம்?

ஓநாய் : பிரமாதமா? அதுதான் எனக்குப் பொ¢ய கா¡¢யம். எப்பேர்ப்பட்ட வாழ்வாய் இருந்தாலும் சா¢, என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். வீட்டில் அகப்பட்டு விதவிதமான உணவுகளைச் சாப்பிடுவதை விடப் பட்டினியாகச் சுதந்திரமாகக் காட்டில் அலைவதே மேல். நான் போகிறேன்.

இந்த விதமாகச் சொல்லிவிட்டுக் காட்டைப் பார்த்து ஓடியது ஓநாய்.

சுதந்திரத்தின் விலை மதிப்பற்றது.

                               மேலும்>>