menu






 சிறுவர் பக்கம் >> ஈசாப் குட்டிக் கதைகள்

ஈசாப் குட்டிக் கதைகள

சிங்கத்தின் பங்கு

காட்டில் வசித்து வந்த சிங்கமும், மற்ற விலங்குகளும் ஒருநாள் கூடின தாங்கள் சமாதானமாய் வாழ்ந்து வருவதற்காக, வேட்டையில் கிடைக்கிறவைகளை எல்லோரும் சமமாய்ப் பங்கிட்டுக் கொள்ளுவது என்று தீர்மானித்தன.

ஒரு நாள் வெள்ளாடு போட்ட வலையில் ஒரு கொழுத்த கலைமான் அகப்பட்டது. எல்லா விலங்குகளையும் அது அழைத்தது. அந்தக் கலைமானைச் சிங்கம் நாலு பங்கு போட்டது. இருப்பதில் நல்ல பங்கை முதலில் அது எடுத்துக்கொண்டு, "நான் சிங்கம், அதனால் இது எனக்குத்தான்" என்று சொல்லியது; மற்றொரு பங்கை எடுத்து வைத்து, "நானே எல்லோரையும் விடப் பலவான் என்று கூறியது; மூன்றாவது பங்கைக் கைப்பற்றி, "எங்கே, உங்களுக்குத் துணிவிருந்தால் அதைத் தொடுங்கள், பார்க்கலாம்" என்று கேட்டது.

- வன்மை உกขமையைக் கொடுக்கிறது.

                               மேலும்>>