ஈசாப் குட்டிக் கதைகள்
நா¢யும் பெண் சிங்கமும்
குழந்தைப்பேற்றில் நா¢களுக்கு ஈடு யாரும் இல்லை என்று ஒரு நா¢ ஒரு
பெண்சிங்கத்திடம் சொல்லியது. மேலும், "வருஷம் தவறாமல் நா¢ பல
குட்டிகள் போடுகிறது. ஆனால் சிலர், தடவைக்கு ஒரு குட்டிதான்
பெறுகின்றனர். அதுவும் வருஷந்தோறும் கிடையாது. தங்கள் ஆயுளிலேயே
இரண்டு மூன்று தடவைதான் பெறுகிறார்கள், இந்தக் கையாலாகாதவர்கள்.
அதிகக் குட்டிகள் பெறுகிறவர்களைக் கேலி வேறு செய்கிறார்கள்" என்றது.
இப்படிப் பேசியது சிங்கத்தைக் குத்திக் காட்டுவது போலிருந்தது. நா¢யைப்
பார்த்துக் கோபமாய், "ஆமாம், நீ சொல்லுவது சா¢தான். உனக்கு ஏராளமாய்க்
குட்டிகள் இருப்பது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் யார்? வெறும் நா¢க்குட்டிகள்.
எனக்கு இருப்பது ஒரே ஒரு குட்டிதான். ஆனால் அது யார்? சிங்கக்
குட்டியாக்கும்" என்று சுடச்சுட பதில் அளித்தது.
ஒன்றானாலும் பலமுள்ளதாயிருக்க வேண்டும்
மேலும்>>