menu






  சிறுவர் பக்கம் >> ஈசாப் குட்டிக் கதைகள்

குரங்கும் ஒட்டகமும்

மிருகங்கள் காட்டில் ஒரு நாள் கூடி உல்லாசமாய்ப் பொழுதைப் போக்கின. அந்தச் சபையில் குரங்கு எழுந்து பலவித வித்தைகளைச் செய்து காட்டியது. வித்தைகளைப் பார்த்த பிராணிகள் எல்லாம் குரங்கைப் பாராட்டி ஆரவாரம் செய்தன. இதைப் பார்த்த ஒட்டகத்துக்குப் பொறாமை ஏற்பட்டது. அதுவும் குரங்கு செய்வதைப் போலப் பலவிதமாக ஆட முயற்சித்தது. ஆனால் அதன் நெட்டைக் கால்களும், கூன் முதுகும், வளைந்து நீண்ட கழுத்தும் சேர்ந்து, அதன் விளையாட்டைக் கேலிக் கூத்தாக்கின. இதைப் பார்க்கப் பிராணிகளுக்குச் சகிக்கவில்லை. உடனே எல்லாம் சேர்ந்து ஒட்டகத்தை அடித்துச் சபையை விட்டு விரட்டின.

காப்பியடிப்பது எப்பொழுதும் வெறுக்கத்தக்கது.

                                          மேலும்>>