பச்சோந்தியும் பிரயாணிகளும்
இருவர் பிரயாணம் போனார்கள். போகிற வழியில் இலையில்லாத ஒரு
மரக்கிளையில் ஒரு பச்சோந்தி இருப்பதை ஒருவன் பார்த்தான். அதன்
பின்புறம் வானம் தொ¢ந்தபடியால் பச்சோந்தி அவனுக்கு நீல நிறமாகத்
தோன்றியது. பச்சோந்தியின் நிறம் நீலந்தான் என்று அவன் சாதித்தான்.
ஆனால் அதை மற்றவன் ஒப்புக்கொள்ளவில்லை. அவன் பச்சோந்தியைப்
பார்த்தபோது இலைகளின் அருகே இருந்தது. அவன் பச்சோந்தி நிறம் நீலம்
அல்ல என்றான். தகராறு முற்றியது. அச்சமயம் அங்கே ஒருவன் வந்தான்.
அவனிடம் இருவரும் தங்கள் வழக்கைச் சொன்னார்கள்.
மூன்றாமவன் : நல்ல வேளையாக இந்த விஷயத்தை என்னிடம் சொன்னீர்கள்.
நேற்று இரவுதான் நான் பச்சோந்தியைப் பிடித்தேன். அதை ஒரு பெட்டியில்
போட்டு வைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லுகிறபடி அது நீலமுமல்ல,
பச்சையுமல்ல. அதன் நிறம் அசல் கருப்பு.
பிரயாணிகள் : கருப்பா?
மூன்றாமவன் : கருப்பேதான். இதோ பாருங்கள். சட்டைப் பையிலிருந்து ஒரு
வெள்ளைக்காகிதப் பெட்டியை எடுத்தான். அதற்குள்ளேதான் பச்சோந்தியை
வைத்திருந்தான். அதைத் திறந்தான். உள்ளே பச்சோந்தியைப் பார்த்தார்கள்.
எல்லோருக்குமே ஆச்சா¢யமாய் விட்டது. ஏனெனில் அவர்கள் பார்த்த
பச்சோந்தி நீலமாகவுமில்லை; பச்சையாகவுமில்லை; கருப்பாகவுமில்லை;
வெள்யையாய் இருந்தது. மூவருமே ஆச்சா¢யப்பட்டுக் கொண்டிருந்தபோது
பச்சோந்தி தலையை நிமிர்த்திக்கொண்டு அவர்களைப் பார்த்து, "ஏ மனிதர்களே!
உங்கள் பகுத்தறிவை உபயோகித்துப் பாருங்கள். நீங்கள் மூவர் சொல்வதும்
உண்மைதான். நீங்கள் ஒவ்வொருவரும் எப்படி தாங்கள் கண்டது உண்மை என்று
நினைக்கிறீர்களோ, அதே மாதி¡¢ மற்றவர்களும் நினைப்பார்கள் என்பது ஏன்
உங்களுக்குத் தொ¢யவில்லை சுற்றுப்புற நிறத்திற்குத் தக்கபடி என்
நிறமும் மாறும் என்பதை நீங்கள் தொ¢ந்துகொள்ளுங்கள்" என்று சொல்லிற்று.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசா¡¢த்து
அறிவதே மெய்.
>> மேலும்