நாயும் முதலையும்
நாய்க்குத் தாகம் அதிகமாய் இருந்தது. ஆற்றில் போய்த் தண்ணீர்
குடிக்கலாம். ஆனால் அதில் முதலைகள் இருந்தபடியால் அங்கே போகப் பயந்தது.
அதற்காக ஒரு தந்திரம் செய்தது; கரையோரமாக ஓடிக்கொண்டே இடையிடையே
தண்ணீரை நக்கியது. இதைப் பார்த்த முதலை, "ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்,
நண்பா? நிதானமாக நின்று தண்ணீர் குடியேன் எனக்கும் உன்னிடம் அளவளாவ
வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை" என்று சொல்லிற்று.
நாய், "அடடா, என்ன அன்பு! நான் உன் வாயில் அகப்பட்டால் உனக்கு
ஆனந்தமாய் இருக்கும் என்பது எனக்குத் தொ¢யாதா? அதற்காகத்தான் நான்
இப்படி ஓடிக்கொண்டே தண்ணீரைக் குடிக்கின்றேன்" என்று பதில் கூறியது.
கெட்டவர்களிடம் நெருங்காதே.
>> மேலும்