குடியானவனும் ஆப்பிள் மரமும்
குடியானவன் தோட்டத்தில் ஒரு பொ¢ய ஆப்பிள் மரம் இருந்தது. ஆனால் அது
காய்ப்பதில்லை. ஆனால் குருவிகளுக்கும் வெட்டுக்கிளிகளுக்கும் தங்கும்
இடமாய் இருந்தது.
இந்த உபயோகமில்லாத மரத்தை வெட்டி விடுவதே நல்லது என்று அவன்
நினைத்தான். அதற்காகக் கோடாலியை எடுத்துக்கொண்டு வந்தான். அதைப்
பார்த்த குருவிகளும், வெட்டுக் கிளிகளும் மரத்தை வெட்ட வேண்டாமென்று
கெஞ்சின. தாங்கள் பாட்டுப் பாடி அவனை மகிழ்விப்பதாகவும், வெட்ட
வேண்டாமென்றும் சொல்லின. ஆனால் குடியானவன் கேட்கவில்லை. கோடாலியை
எடுத்து வெட்ட ஆரம்பித்தான்.
அச்சமயம் மரத்தில் ஒரு பொந்து தென்பட்டது. அதற்குள்ளே என்ன இருக்கிறது
என்று பார்த்தான். ஒரு பொ¢ய தேன்கூடு தேன் நிறைந்து இருந்தது. அதைக்
கண்டதும் குடியானவனுக்குச் சந்தோஷம் பொங்கியது, இந்த மரம்
இல்லாவிட்டால் தேன்கூடு கிடைத்திருக்குமா என்று நினைத்தான்; இனி
மரத்தை வெட்ட மாட்டேன் என்று சொல்லி கோடாலியைத் தூர வீசினான்.
சுயநலமில்லாமல் சிலர் ஒரு கா¡¢யத்தையும் செய்ய
மாட்டார்கள்.
>> மேலும்