menu






 சிறுவர் பக்கம >> ±ÚõÒõ ÀðÎôâÔõ

எறும்பும் பட்டுப்பூச்சியும்

ஓர் எறும்பு உணவு தேடப் போய்க்கொண்டிருந்தது. வழியில் ஒரு பட்டுப்பூச்சிப் புழு, கூட்டிற்குள்ளிருந்து வெளியே வரும் பருவத்தில் வாலை ஆட்டிக் கொண்டிருந்தது. எறும்பு அதைப் பார்த்துப் பா¢தாபம் கொண்டு, "பாவம், நான் எங்கு வேண்டுமானாலும் ஓடி ஆடித் தி¡¢கிறேன். எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் ஏறுகிறேன். உன்னால் இருந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. உன் கதி இப்படி இருக்கிறதே!" என்று சொல்லியது. இதைக் கேட்ட புழு ஒன்றும் பதில் சொல்லவில்லை.

சில தினங்கள் கழித்து அதே வழியாக எறும்பு திரும்பவும் வந்தது; பட்டுப்பூச்சியின் கூடு மட்டும் கிடந்தது. உள்ளே ஒன்றுமில்லை. புழுவின் கதி என்னவாயிற்று என்று அது திகைத்து நிற்கும்போது அழகான இறக்கையோடு பட்டுப்பூச்சி அங்கே தோன்றியது; எறும்பைப் பார்த்து, "ஏ எறும்பே, என்னைப் பார்த்து முன்னால் பா¢தாபம் கொண்டாய்; இப்பொழுது என்னைப் பார். எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் ஏறமுடியுமென்று பெருமையடித்தாய். சா¢ இப்பொழுது நான் பறக்கிற உயரத்திற்கு ஏறி வா பார்க்கலாம்" என்று சொல்லி கேலி செய்தது.

தற்கால நிலையைக் கண்டு யாரும் பெருமை கொள்ளக் கூடாது

                                         >> மேலும்