மயிலின் குறைபாடு
பிரம்மாவிடம் போய் ஒருநாள் மயில் தனக்கு நல்ல குரல்
கொடுக்காததைப் பற்றி குறை கூறியது; தன் குரலைக் கேட்டு எல்லோரும்
சி¡¢க்கிறார்கள் என்றது; ஓர் அற்பப் பறவையான குயிலுக்கு யாரும்
பரவசமடையக் கூடிய குரலைக் கொடுத்திருக்கிறீர்களே என்று கேட்டது.
பிரமமாவுக்கு உண்மையிலேயே கோபம் வந்தது; அதைப் பார்த்து பின்வருமாறு
சொன்னார்:
"ஓ பொறாமை பிடித்த பறவையே, நீ குறைபட்டுக்கொள்வதற்கு இடமே கிடையாது.
வானவில்லின் வர்ணங்களெல்லாம் உன் கழுத்தில் ஜொலிக்கின்றன. உன் தோகையை
வி¡¢த்தாலோ முத்துக்களைப் பரப்பியதைப் போல இருக்கிறது. வேறு எதற்கும்
இவ்வளவு அழகு கிடையாது. மேலும் எல்லா நல்ல குணங்களையும் ஒரு
ஜீவராசியிடம் ஒருங்கே காண முடியாது. பருந்துக்கு வேகத்தைக்
கொடுத்திருக்கிறேன். கழுகுக்குப் பலத்தையும், கிளிக்குப் பேச்சையும்,
ஆந்தைக்கு அறிவையும், குயிலுக்குக் குரலையும் கொடுத்திருக்கிறேன்.
உனக்கோ உருவம், அழகு, இரண்டும் இருக்கின்றன. எனவே, குறைபடுவதை விடு.
இல்லாவிடில் உள்ளதையும் பறித்து விடுவேன்."
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மேலும்>>