menu






 சிறுவர் பக்கம் >> ®º¡ôÀ¢ý Å¢¨Ç¡ðÎ

ஈசாப்பின் விளையாட்டு

ஒரு பொ¢யவர் தெருவழியாகப் போய்க்கொண்டிருந்தார்; சிறுவர்களோடு ஈசாப்பு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சா¢யப்பட்டார்.

'என்னப்பா நீ, பொ¢யவனாய் இருந்தும் இம்மாதி¡¢ விளையாட உனக்கு வெட்கம் இல்லையா?' என்று கேட்டார். ரொம்பப் பணிவோடு ஈசாப்பு ஒரு வில்லை எடுத்து அவர் முன்பு வைத்தார்.

அப்புறம் அவர், "இதைப் பாருங்கள். இந்த வில்லில் நாணை எப்பொழுதும் ஏற்றியே வைத்திருந்தால் நாண் அறுந்து போகும். அல்லது தொய்ந்து போகும். நாணை அவசியமில்லாதபோது கழற்றி வைத்திருந்தால்தான் உபயோகிக்கும்போது மாட்டினால் நல்ல முறுக்காய் இருக்கும்" என்று சொன்னார். பொ¢யவர் திருப்தி அடைந்தார்.

ஓய்வும் விளையாட்டும் உடம்புக்கு அவசியம்

                                         >> மேலும்