menu






 சிறுவர் பக்கம் >> ஈசாப் குட்டிக் கதைகள்

கோழியும் நா¢யும்

தின்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று ஒரு நா¢ ஒரு வீட்டின் புழக்கடையில் போய்த் தேடியது ஒன்றும் அகப்படவில்லை. மேலே பார்த்தது. வீட்டு முகட்டில் ஒரு கோழி உட்கார்ந்து கொண்டிருந்தது. அதை ஏமாற்ற நினைத்துப் பின்வருமாறு பேசியது. "ஆ நண்பனே, உன்னைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்தேன். உனக்கு உடம்பு சா¢யில்லை என்பதைக் கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உன்னைப் பார்த்தாலும் அசெளகா¢யமாகவே தோன்றுகிறது. கீழே இறங்கி வா. உன் நாடியைச் சோதித்துப் பார்க்கிறேன்."

இதைக் கேட்ட கோழி, "நண்பனே நீ சொல்லுவது முற்றிலும் உண்மை. இப்பொழுது எனக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தைப் போல இதற்கு முன்னால் ஏற்பட்டதே கிடையாது. கீழே இறங்கிவர முடியாது. மன்னித்துக்கொள். நான் இறங்கி வந்தால், அந்த வினாடியே என் உயிர் போய்விடும் என்பது எனக்குத் தொ¢யும்" என்று சொல்லியது.

நா¢ ஏமாற்றத்துடன் திரும்பியது.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

                                        >> மேலும்