menu






 சிறுவர் பக்கம் >> ஈசாப் குட்டிக் கதைகள்

சிங்கமும் யானையும்

சிங்கம் ஒரு நாள் தன்னைத்தானே நொந்து கொண்டது. அது "எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன பயன்? நிம்மதியாய் இருக்க முடியவில்லையே! கேவலம் இந்தச் சேவல் கூவுகிற சப்தம் என்னை நடுங்க வைக்கிறது. என்னால் தாங்க முடியவில்லை. இம்மாதி¡¢ பயந்து கொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா?" என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டது.

அச்சமயம் அங்கே யானை வந்தது. ரொம்பக் கவலையோடு தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக் கொண்டே நடந்தது. அதைப் பார்த்துச் சிங்கம், "என்னப்பா, உனக்கு என்ன கவலை? உன்னை எதிர்க்கக்கூடிய பிராணியும் இருக்கிறதா? உன் உடலைப் பார்த்தாலே எல்லாம் பயந்து ஓடுமே? எதற்காக நீ கவலையோடு நடக்கிறாய்?" என்று கேட்டது.

யானை, "இதோ! என் காதுப் பக்கத்தில் பறக்கிற குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் போய் கொட்டிவிட்டால் போதும்; என் உயிரே போய்விடும். அதற்காகத்தான் இது காதுக்குள்ளே போய் விடாதபடிக் காதுகளை ஆட்டிக் கொண்டு வருகிறேன்" என்றது.

சிங்கம் யோசித்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை இருக்கும் என்று அதற்குத் தோன்றியது. ஜீவராசிகளுக்குப் பிறவியிலேயே ஏற்பட்டுள்ள கவலைதான் தனக்கும் ஏற்பட்டிருக்கிறத என்பதைக் தொ¢ந்து கொண்டது. எனவே, வாழ்க்கையில் உள்ள நல்ல விஷயங்களை இந்தக் கவலையேதான் மறைக்கிறது என்பதை அது பு¡¢ந்து கொண்டது. அதிலிருந்து கவலையை விட்டு மகிழச்சியாய் வாழ்ந்து வந்தது.

கவலையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருந்தால்
அது வளர்ந்து கொண்டே போகும்.