கழுதையும் சிங்கமும் சேவலும்
கழுதையும் சேவலும் மேய்த்து கொண்டிருந்த இடத்திற்கு
தற்செயலாகச் சிங்கம் வந்தது. சிங்கத்தைப் பார்த்துப் பதறிய சேவல் பலம்
கொண்ட மட்டும் கொக்கா¢த்தத. அந்தச் சிங்கத்திற்குக் கோழியின் கொக்கா¢ப்பு
மட்டும் பிடிக்கவே பிடிக்காது. எனவே, அந்த இடத்தைவிட்டு ஓட்டம்
பிடித்தது. சிங்கம் ஓடுவதைக் கண்ட கழுதை தன்னைக்கண்டு பயந்து சிங்கம்
ஓடுவதாக எண்ணி, அதைத் துரத்திக்கொண்டு ஓடிற்று. சேவலின் கொக்கா¢ப்பு
காதுக்கு கேட்காத தூரத்திற்குப் போனதும் சிங்கம் திரும்பி, கழுதைமீது
பாய்ந்து அதைச் சின்னா பின்னமாக்கிக் கொன்றது.
வீண் பெருமை ஆபத்தில் முடியும்.
மேலும்>>