எறும்பும் ஈயும்
ஓர் ஈயும் எறும்பும் ஒரு நாள் தங்கள் பெருமைகளைப் பற்றி வாதஞ்
செய்தன.
ஈ : ஊர்ந்து செல்லும் அற்பப் பூச்சியாகிய உனக்கு என்னோடு ஒப்பிட்டுப்
பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? நான் ஊர்வதில்லை; பறவையைப் போல மேலே
பறக்கிறேன்; அரண்மனைகளுக்குள் தங்கு தடையில்லாமல் போகிறேன்; ராஜாக்கள்,
சக்கரவர்த்திகள் முடிகள்மீத உட்காருகிறேன்; அழகான ராணிகளின் தாமரை
போன்ற முகங்களில் அமருகிறேன். அது மட்டுமா? தெய்வங்களின்
மூலஸ்தானங்களுக்கும் போகிறேன். அங்கே நான் ருசிபார்க்காத
நெய்வேத்தியங்களே கிடையாது. எப்பேர்ப்பட்ட விருந்தானாலும் சா¢, நான்
போய் ருசி பார்க்கிறேன். உயர்ந்த சாப்பாடுகளையும், பானங்களையும் நான்
அருந்துகிறேன். உன்னைப் போல ஒன்றிரண்டு பருக்கைகளைக் கொண்டு பல
நாட்களைத் தள்ளுகிற வழக்கம் எனக்கில்லை.
எறும்பு : ரொம்ப அழகுதான். நான் சொல்லுகிறேன் கேள். உன் விருந்துகளைப்
பற்றிப் பிரமாதமாய்ப் பேசுகிறாய்! ஆனால், உனக்குச் சாப்பாடு எது
என்பது உன் இஷ்டத்தைப் பொறுத்ததல்ல. சில சமயம் நீ சாப்பிடும் சாப்பாடு
இருக்கிறதே, அப்பப்பா! யார் என்ன கொடுத்தாலும் நான் அதைத் தொடக்கூட
மாட்டேன். என்னவோ ராஜாக்கள் மீது இருந்தாலும் சா¢, கழுதைகள் மீது நீ
இருந்தாலும் சா¢, நீ போய் அமர்ந்த உடனேயே வெறுப்புக் கொண்டு அவர்கள்
உன்னை விரட்டுகிறார்கள். அப்புறம் நெய்வேத்தியங்கள் வேறு உனக்கு!
அங்கெல்லாம் உன்னைப் பார்த்த உடனேயே என்ன வரவேற்பு! விரட்டு
விரட்டென்று விரட்டுகிறார்கள். மழைக்காலங்களில் கூட என் உழைப்பினால்
சேகா¢த்தவைகளைச் சாப்பிட்டுக்கொண்டு நான் செளகா¢யமாய் இருக்கிறேன்!
ஆனால் நீயோ மழைக் காலங்களில் குளிராலும், பட்டினியாலும் சாகிறாய்.
சா¢, உன்னுடன் பேசி என் நேரத்தை வீணாக்க நான் பி¡¢யப்படவில்லை.
பேசுவதால் என் வாயோ, வயிறோ நிரம்பப் போவதில்லை.
உழைப்பின் பலனே உண்மையான சுகம்.
>>மேலும்