menu






 º¢ÚÅ÷ Àì¸õ>> ஈசாப் குட்டிக் கதைகள்

ஈசாப் குட்டிக் கதைகள்

அடிமையும் சிங்கமும்

ரோம ராஜ்யத்தில் அடிமை வழக்கம் இருந்தபோது ஓர் அடிமை எஜமானனைவிட்டுத் தப்பிக் காட்டுக்கு ஓடி விட்டான். காட்டில் இருந்தபோது ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. அடிமை ¨தா¢யம் கொண்டு அதன் காலைப் பார்த்தான். அதிலே ஒரு முள் தைத்திருந்தது. அதைப் பிடுங்கி எறிந்து, காலைத் தடவிக் கொடுத்தான். சிங்கம் சந்தோஷ மடைந்து காட்டுக்குள் ஓடியது.

சிறிது காலத்திற்கப்பால் காட்டிலிருந்து அடிமையைப் பிடித்து அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு மரண தண்டனை அடைந்தவன் மீது ஏவி விடுவதுதான் அக்காலத்தில் மரண தண்டனையை நிறைவேற்றும் முறை. அதே மாதி¡¢ அடிமைமீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வெகு வேகமாக அடிமையைப் பார்த்துப் பாய்ந்து வந்தது. பக்கத்தில் வந்ததும் அவன் தன் காலில் முள் எடுத்தவன் என்பதை அறிந்ததும் நாய்ப்போலப் பேசாமல் நின்றுவிட்டது. அடிமையும் சிங்கத்தை அறிந்ததும் தடவிக் கொடுத்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு வேடிக்கை பார்க்க வந்தவர்களும் ஆச்சா¢யப்பட்டார்கள். காரணம் என்னவென்று அரசன் கேட்டான். விவரங்களை அடிமை சொன்னான். அரசன் திருப்தியடைந்து அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தைக் காட்டில் கொண்டு போய்விடும்படி உத்திரவிட்டான்.

நன்மை செய்தவர்கள் நன்மை அடைவார்கள்.