ஈசாப் குட்டிக் கதைகள்
மூன்று எதி¡¢கள்
ஒரு விவசாயிக்கு மூன்று எதி¡¢கள் இருந்தார்கள். ஓநாய், நா¢, முயல்
மூன்று எதி¡¢களும் ஒரு நாள் விவசாயியின் பண்ணைக்குப் போய்த்
தங்களுக்கு வேண்டியவைகளைத்தின்றன; அன்று அகப்படாமல் தங்கள்
இருப்பிடங்களுக்குத் திரும்பின. ஆனால் விவசாயி சும்மா இருக்கவில்லை.
அவைகளைப் பிடிக்கப பத்தயங்கள் வைத்தான். அவை மூன்றும் ஒரு நாள்
அகப்பட்டன. முதலில் முயலிடம், "ஏன் என் பண்ணைக்குள் வந்தாய்?" என்று
கேட்டான்.
முயல்: "நான் வந்தது தவறுதான். சில முள்ளங்கி இலைகளைப் பசிக்காகச்
சாப்பிட்டேன். இனி இங்கே வரவே மாட்டேன். இந்தத் தடவை என்னை மன்னித்து
விட்டுவிடு."
அடுத்தப்படியாக நா¢யை விவசாயி கேட்டான்.
நா¢: "நான் எதையும் திருடுவதற்காக என் தோட்டத்திற்கு வரவில்லை.
முயல்களும் மறறப் பிராணிகளும வந்து உன் தோட்டத்தை அழித்து விடாமல்
காப்பாற்றுவதற்காகவே நான் வந்தேன். உன்னைப்பற்றிப் பலர் பலவிதமாகக்
சொன்னாலும் உன்னிடத்திலும் உன் நியாயத்திலும் எனக்குப் பூரண நம்பிக்கை
உண்டு. எந்தவிதமான அக்கிரமும் நீ செய்யமாட்டாய் என்பது எனக்குத் தொ¢யும்."
கடைசியாக ஓநாயைப் பார்த்து "நீ ஏன் வந்தாய்?" என்று கேட்டான்.
ஓநாய்: உன் ஆட்டுக்குட்டிகளைத் தின்பதற்காகவே நான் வந்தேன். அப்படி
தின்பதற்கு எனக்கு உ¡¢மையுண்டு. எங்கள் ஓநாய் சமூகத்திற்கு
நிச்சயமாய்ச் சேர வேண்டிய ஆட்டுக்குட்டிகளை நீதான் திருடி
வைத்திருக்கிறாய். எனக்கு என்ன நோ¢ட்டாலும் சா¢ ஆட்டுக்குட்டி
வேட்டையாகிய என் உ¡¢மையை நான் விடமாட்டேன்."
இவ்வாறு மூன்று பிராணிகள் சொன்னதையும் விவசாயி கேட்ட பின்பு,
"முயல் உள்ளதை ஒப்புக் கொண்டது. மன்னிப்பும் கேட்டது. அதனால் அதை
விடுதலை செய்கிறேன். நா¢யும், ஓநாயும் கொலை செய்திருக்கின்றன. அதை
மறைக்க நா¢ பொய் சொல்லுகிறது. ஓநாய் அகம்பாவமாய்ப் பேசுகிறது. ஆகையால்
இந்த இரண்டையும் சேர்ந்தாற்போலத் தூக்கில் போடுகிறேன்"
என்று தீர்ப்புக் கூறினான்.
உள்ளதை ஒப்புக்கொண்டால் மன்னிப்புப்
பெறமுடியும்.