menu






 சிறுவர் பக்கம்>> யார் இவர்கள்...!

யார் இவர்கள்...!

யோகிராம்சுரத்குமார் (1918-2001):

யோகி ராம்சுரத்குமார் காசியில் பிறந்தார். குருவைத் தேடிய இவர் அரவிந்தர், ரமண மகா¢ஷி ஆகியோரையும் சந்தித்தார். பின்பு ஆனந்த ஆசிரமம் வந்தடைந்தார். சுவாமி ராமதாஸ் இவர் காதில் ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம் என்று மூன்று முறை கூறினார். 1959ல் திருவண்ணாமலை வந்த இவர் 2001 பிப்பரவரி 20ல் சித்தியடைந்தார்.

குஜ்ரால் (1919):

ஐக்கிய முன்னணி சார்பில் 1997 பிரதமரானவர் குஜ்ரால் 11 வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். 1942ல் சிறை சென்றவர். மத்திய அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர் வெளியுறவுத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்.

அம்பேத்கர் (1891-1958):

இந்திய அரசியல் சட்ட மேதை அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து அதன் கொடுமைகளை அனுபவித்து, அவர்களின் இழிவு நிலையை வெளிப்படுத்தி அவர்களை இயக்க ¡£தியில் ஒன்றுபடுத்தி அவர்கள் உயர்வுக்கு செயல்¡£தியாகவும் சட்டா£தியாகவும் முயற்சிகளை மேற்கொண்டவர்.

ரமண மகா¢ஷி (1879-1950) :

ரமண மகா¢ஷி திருவண்ணாமலை அடிவார ஆசிரமத்தில் ஞானஒளி பரப்பிய மகான். மதுரையில் இவர் பெற்ற ஞான அனுபவம் துறவு பூண்டு உயர வழி வகுத்தது. இவர் மாலையோ, ருத்ராட்சமோ, அல்லது வேறு எந்த அணிகலன்களோ அணிந்தது கிடையாது. இவர் தன்னை குருவாக சித்தா¢க்கவோ அல்லது சீடர்களை உருவாக்கவோ முனையவில்லை. அத்வைத நெறி நின்றவர். 1950ல் இப்பூவுலகை விட்டு ரமண மகா¢ஷி மறைந்தார்.

ராஜாஜி (1878-1972):


மூதறிஞர், அரசியல் சாணக்கியன் என்று புகழப்பட்டவர் ராஜாஜி. இவர்தான் முதலும் கடைசியுமான இந்திய கவர்னர் ஜெனரல். தமிழக முதல்வராகவும் பணியாற்றினார். ரவுலட் சட்டத்தை எதிர்த்தார். இவரை ராஜாஜி என்று முதலில் அழைத்த பாரதியாரை காந்திக்கு அறிமுகம் செய்தவரும் ராஜாஜிதான். பாரத ரத்னா விருது பெற்றவர். உலகை வசீகா¢த்த எழுத்தாற்றல் கொண்டவர்.

பாரதியார் (1882-1921):

குழந்தை, தெய்வம், நாடு, மொழி ஆகியவற்றை தனது இனிய கவிதையால் போற்றியவர் பாரதியார். இவரது பாடல்கள் தேச விடுதலையின் போது மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தன. டிசம்பர் 11ல் எட்டயபுரத்தில் பிறந்த இவர் 1905ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியா பத்தி¡¢க்கை நடத்தினார் புதுச்சோ¢க்கு சென்று தெயவீகப் பாடல்கள் பல எழுதினார். அவர் தமிழகம்திரும்பிய போது பி¡¢ட்டிஷாரால் கைது செய்யப்பட்டு 34 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1921 செப்டம்பர் 12ல் அவர் மறைந்தார்.

ராமானுஜம் (1887-1920):

ராமானுஜர் இந்தியாவின் மாபெரும் கணித மேதை. எண்கணிதத்தில் தலைசிறந்து விளங்கியவர், ஈரோட்டில் பிறந்த இவர் தனது கணித ஆற்றலால் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். கணிதத்தில் தீர்க்க முடியாத முடிச்சுகளை அவிழ்த்தவர். ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்ட அவர் 1920 ஏப்ரல் 26ல் மறைந்தார்.

பொ¢யார் ஈ.வெ.ராமசாமி (1879-1973):

தந்தை பொ¢யார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி செப். 17ல் ஈரோட்டில் பிறந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து இவர் தாம் வகித்த ஈரோடு நகராட்சி தலைவர் பதவியை துறந்தார். வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் நடத்தினார். சமூக விடுதலை, சீர்திருத்தம் ஆகியவற்றுக்காக இவர் தீவரப் பணியாற்றினார். பகுத்த்றிவுக் கொள்கைகளைக் கொண்ட இவர் கருப்பு சட்டை அணிவார். டிசம்பர் 24ல் இவர் மறைந்தார்.

எம்.ஜி.ஆர் (1917-1987):

ஏழைகளின் இதய தெய்வம், கருணை உள்ளம் கொண்டவர் என்று இவர் பொதுமக்களால் அழைக்கப்படுகிறார். அதற்கேற்ப இவரது ஆட்சியில் நலத்திட்டங்கள் பல இடம்பெற்றன அதனால் மக்கள் தலைவர் என்று அழைக்கப்பட்டார். இலங்கையில் உள்ள கண்டியில் ஜனவா¢ 17ல் பிறந்தார். தொடக்கபள்ளிக்கு மேல்; படிக்க முடியாத சூழ்நிலை, குடும்பத்தை காப்பாற்ற நாடகக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் திரைப்படத் துறையில் நுழைந்தார். சதிலீலாவதி இவரது முதல்படம். தி.மு.க வில் சேர்ந்து பணியாற்றினார். 1972ல் கருணாநிதி இவரை கட்சியை விட்டு நீக்கனார். அப்போது எம்.ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றியே பெற்றது. 1977முதல் 1987 டிசம்பர் 24ஆல் அவர் மறையும் வரை அவரே முதல்வர்.

வாஜ்பாய் (1926):

திருமணமாகாத முதல் பிரதமர் வாஜ்பாய் கவிஞர், எழுத்தாளர், சமூக சேவகர், சிறந்த பார்லிமென்டோ¢யன் என்று பல முகங்களைக் கொண்டவர். நேரு முதல் இன்று வரையான தலைவர்களுடன் அரசியல் பு¡¢ந்து அனுபவம் பெற்றவர். மூன்று முறை பிரதமராக பதவி ஏற்ற இவர் அப்பழக்கற்றவர் என்று இந்திய லஞ்ச ஒழிப்புத்துறை பாராட்டுத் தொ¢வித்தது.

குரு கோவிந்த சிங் (1666-1708):

சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த சிங் தலைசிறந்த குரு. மக்களுக்கு சா¢யானவற்றை எடுத்துரைக்கவும் அறவழியில் நடந்துகொள்ளவும் இறைவனால் அனுப்பபட்டடேன் என்று கூறியவர்.