menu






 வணிகம் >> நியாய வணிகம்
 

1954-ஆம் ஆண்டு யுனைடேட் புரூட் நிறுவனம், அமொ¢க்க ஆதரவு நிலையுடன் அங்கு இருந்த, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜேக்கப் அர்பென்ஸ் என்பவரது ஆட்சியைக் கலைக்க வேலை செய்தது. இது 4 லட்சம் ஏக்கர் நிலத்தைப் பி¡¢த்து மக்களுக்குக் கொடுத்து சாகுபடியாளர்களுக்கு நல்ல சம்பளமும் தருவதாக உறுதியளித்தது. ஆட்சி கலைப்பைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்து மிக வேகமாகப் பரவியது. யுனைடெட் ·புரூட் நிறுவனம் தனக்கு இதில் தொடர்பில்லை என்று காட்டிக்கொள்ள அமொ¢க்காவிடம் பேரம்பேசியது.

அதன்படி அமொ¢க்க அரசு யுனைடெட் ·புரூட் நிறுவனம் மீது ஏகபோக எதிர்ப்பு, நம்பிக்கை மோசடி வழக்கு தொடர்ந்தது 1958ல் இந்நிறுவனம் மூன்றாக உடைக்கப்பட்டது. அப்போதுதான் மூன்று பொ¢ய நிறுவனங்களான சிகுடா, டோல் ·புட், டெல் மோன்டி ஆகியவை தோன்றின. இன்று உலகின் மாபெரும் 3 வாழைப்பழ நிறுவனங்களான இவற்றிற்கும் தாய் நிறுவனமான யுனைடெட் ·புரூட் நிறுவனத்தின் அதே குணம் இருக்கிறது.

மிகக் கவனமாகப் பார்த்தபடி ·பெலிசியானோ பேருந்தில் என்னருகில் அமர்ந்திருந்தார். அவரது கவனத்திற்கான காரணம், இப்பகுதி ஒரு துடிப்பான தொழிற்சங்கப் போராளிக்கு மிகவும் ஆபத்தானது. என்றாலும் அவர் என்னிடம் மிக நேர்மையாகவும், கவனமாகவும் இங்குள்ள மக்களின் வாழ்க்கையைக் காட்டுவதாக ஒப்புக்கொண்டார். இவரது குடும்பம் வாழைத் தொழிலில் 60 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இவரது தந்தை ஓய்வுபெற்றுவிட்டார். அவருக்கு மிகச்சிறிய துண்டு நிலம் உள்ளது. அவரது சகோதரர்கள் இன்னும் வாழைத் தோட்டத் தொழிலாளியாக இருந்து வருகின்றனர்.

சாலையின் இருபுறமும் வாழைத் தோட்டங்களே அடர்ந்து இருந்ததால் வேறு எதுவும் தொ¢யவில்லை. பயணச்சீட்டு வாங்குபவர் கொசுக்களை அடித்துக்கொண்டிருந்தார். நாங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறங்கிக்கொண்டோம். அங்கு ஒரு கருப்பு நிற கிட்டங்கி இருந்தது. அங்கு கான்கி¡£ட் தொட்டிகள் இருந்தன. உள்ளே இரும்பு பெஞ்சுகளும் ஒரு மர மேசையும் இருந்தன. அங்கிருந்து ஆக்டோவியானோ, கில்லர்மோ என்ற இருவரை பெலிசியானோ அறிமுகம் செய்துவைத்தார். இந்தத் தோட்டமானது விக்டர் மனுவேல் என்பவருக்குச் சொந்தமானது.

"நாங்கள் முற்றிலும் கைவிடப்பட்டவர்கள்" என்றார் ஆக்டோவியானோ.

மேலும், "எங்களுக்கு குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் இல்லை. எங்களுக்கு வந்துகொண்டிருந்த தண்ணீரையும், மின்சாரத்தையும் துண்டித்துவிட்டார்கள். நாங்கள் மாசுபட்ட கிணறுகளில் இருந்து நீர் எடுக்கிறோம். நாங்கள் சிறிது சிறிதாக நஞ்சால் கொல்லப்படுகிறோம்" என்றார்.

சிறிது நேரத்தில் எங்களைச் சுற்றி இருநூற்றிற்கும் மேற்பட்ட பொ¢யவர்கள் குழந்தைகள் என்று சேர்ந்துவிட்டனர். இன்னும் சிலர் வரவேண்டியுள்ளது என்றனர். காத்திருக்கிறோம்.

"நாளும் பொழுதும் நாம் வேதிப்பொருட்களிலேயே கிடக்கிறோம். பகலிலும் இரவிலும் நெடுநேரம் வேலை செய்தாக வேண்டும். நமது உடல் நோய்வாய்ப்படுகிறது. நமது கால்கள் அழுகுகின்றன. பெரும்பாலும் குழந்தைகளுக்குப் பாலூட்டக்கூட நமது பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதிலிருந்து விடுபட நாம் ஒன்றாக வேண்டும். தொழிற்சங்கத்தில் சேர்ந்தாக வேண்டும்" என்றார் ஆக்டோவியானோ.

                                        தொடரும்....
டேவிட் ரான்சம்