|
வாழைக்காயானது பழுக்கும் முன்பே வெட்டி எடுக்கப்பட்டு, சில சமயம் வேதி
பொருட்களால் குளிப்பாட்டப்பட்டு, அனுப்பப்படுகிறது. இந்த பச்சை வாழைத்தார்கள்
பெட்டிகளில் அடைக்கப்பட்டு, குளிரூட்டப்பட்ட கப்பல்களில் ஏற்றப்படுகின்றன. இவை
ஐரோப்பாவிற்கும், வட அமொ¢க்காவிற்கும் கொண்டு செல்லப்படுகின்றன. பின்பு இவை
பேரங்காடிகளில் பழுக்க வைக்கப்பட்டு தரமானவை என்று சொல்லி விற்கப்படுகின்றன.
அறியாமையில் வாங்கும் எண்ணற்ற மக்களிடமிருந்து வணிகர்கள் கோடிக்கணக்கில்
பணத்தைக் குவிக்கின்றனர். வடக்குலகில் நுகரப்படும் பழங்களில் 80%
வாழைப்பழமாகும். இந்த வாழைச்சந்தையைக் கையில் வைத்திருப்பவர்கள் சிகுட்டா,
டோல், டெல் மோன்டே ஆகிய நிறுவனங்களேயாகும். இவை மூன்றும் இணைந்து கூட்டமைப்பு
ஒன்றை நிறுவி முழுக்சந்தையையும் கைப்பற்றியுள்ளன. இவர்களைப் பற்றிய ஒரு பொ¢ய
அறிக்கையை 1998, மே மாதம் 'சின்சின்னாதி என்குயரர்' என்ற இதழில் வெளியிட்டனர்.
உடனே இந்த இதழின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
கட்டுரை போதிய சான்றுகளோடு இல்லாமலிருந்ததால் அந்த இதழானது அவா¢டம் மன்னிப்பு
கேட்டதுடன் ஒரு கோடி டாலர் இழப்பீடும் அளித்தது. அதோடு, அந்த இதழின்
இணையதளத்தில் இருந்தும் அந்த அறிக்கை உருவப்பட்டது. வாழைப்பழப்போ¡¢ன்
மறுபக்கமாக உலகில் மிகப்பொ¢ய இறக்குமதியாளரான ஐரோப்பிய ஒன்றியம் தனது பழைய
காலனி நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதாவது வாழைத் தொழிலை
பாதுகாத்துக்கொள்வதற்காக ஆப்பி¡¢க்க, கா¢பியன், பசிபிக் கூட்டமைப்பு ஒன்று
உருவாக்கப்பட்டது. இது லோமே என்ற இடத்தில் ஒரு மாநாடு நடத்தியது. 1975-ஆம்
ஆண்டு நடத்தப்பட்ட இம்மாநாட்டு ஒப்பந்தம் 4 முறை புதுப்பிக்கப்பட்டது. இதற்கு
லோமே ஒப்பந்தம் என்று பெயர். இதனால் வாழைப்பழம் விளைவிக்கும் நாடுகளுக்கு
ஒன்றும் பொ¢ய நன்மை ஏற்பட்டுவிடவில்லை. குறிப்பாக வின்வார்டு தீவுகள்,
டொமினிகா, செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட், கிரனடா ஆகியவற்றுக்கு
நெருக்கடி ஏற்பட்டதுதான் மிச்சம். இங்குள்ள சாகுபடியாளர்கள் ஏறத்தாழ இரண்டு
மடங்கு விலைக்குத் தர வேண்டும். டாலருக்காக விற்கப்படும் வாழைப்பழத்திற்கு
அடக்க விலையில் மூன்று மடங்கு தரவேண்டும். ஏற்கனவே சொன்ன மூன்று பெரும்
நிறுவனங்களால், குறிப்பாக சிகுட்டாவால் வாழைப்பழப்போர் முடுக்கிவிடப்பட்டது.
உச்சவரம்பு நீக்கம், கொடுக்கவேண்டிய கட்டணத்தைக் குறைத்தல், என கட்டுப்பாடுகளை
நீக்குவதற்கு இவர்கள் முனைந்தனர்.
ஆப்பி¡¢க்க, கா¢பியன், பசிபிக் உற்பத்தியாளர்களுக்குத் தரவேண்டிய தொகையைத்
தராமல், அவர்களை வணிகத்தில் இருந்து வெளியேற்ற முயன்றனர். மேலும், 1995-ஆம்
ஆண்டு புதிய முத்திரையுடன் வந்த, வணிகம், சுங்கவா¢ தொடர்பான பொது ஒப்பந்தம் (காட்)
குறித்த உருகுவே சுற்று பேச்சுவார்தையால் உருவாக்கப்பட்ட உலக வணிக நிறுவனம்
வேறுவகையான முடிவுகளுடன் தாராளமயம் என்ற கொள்கையுடன் வந்தது. இது ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு மிகவும் சிக்கலாக அமைந்தது. என்றாலும் வாழைப்பழப் போர் என்பது
வாழைப்பழத்திற்காக மட்டும் நடைபெறவில்லை. அத்துடன் தொடர்புடைய அரசுகளின்
அதிகாரம், தேசங்கள், வணிகப்பகுதிகள் நிறுவனங்கள், வேளாண்மையின் அமைவு,
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான வேளாண் கொள்கை, சிறிய தீவுகளின் பொருளாதாரம்
போன்ற அனைத்தையும் உள்ளடக்கி இருந்தது. அதே சமயம் தெற்குலகில்
பல்லாயிரக்கணக்கில் வாழைச் சாகுபடியாளர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவர்கள் என்ன நினைக்கின்றனர், இந்த
நிகழ்வு அவர்களை எப்படிப் பாதிக்கின்றது என்பது பற்றி அவர்களது கருத்தைக் கூட
யாரும் கேட்டது கிடையாது.
1999-ஆம் ஆண்டு வாழை ஏற்றுமதி நாடுகளின் நிலைமையை நேரடியாகத் தொ¢ந்துகொள்வதற்காக
நான் ஒரு பயணம் மேற்கொண்டேன். பல நாடுகளை அடிமைப்படுத்தியிருந்த முன்னாள்
வல்லரசான ஐரோப்பியக் கூட்டமைப்பிற்கும், இன்றைய டாலர் ஆதிக்கவாதியான, அடிமை
தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டிருந்த அமொ¢க்காவிற்கும் இடையே வாழைப்பழப்போர்
நடந்து வந்தாலும், உலக வணிக நிறுவனத்தின் விதிமுறைகள் அமொ¢க்காவிற்குச்
சாதகமாகவே அமைந்திருந்தன. இந்த இருவருமே சாகுபடியாளர்களுக்கு உருப்படியான
எவ்வித நன்மையையும் செய்யப்போவதில்லை என்பது தொ¢ந்ததே. எனவே இப்போதுள்ள கேள்வி,
எது இவர்களை இடமாற்றப்போகிறது? என்பதே.
என்னைப் பொறுத்தளவில் 'நியாய வணிகம்' இத்தகைய பணியைச் செய்யும் எனக்
கருதுகிறேன். நியாய வணிகமும், உயிர்ம முறைச் (Organic) சாகுபடியும்
சமச்சீரையும், சூழல் பாதுகாப்பையும் முன்னிறுத்தும். இதைக் குவாதி மாலாவில்
பார்க்க முடியவில்லை. இதன் குறுகிய கடற்கரைப் பகுதியில்தான் நவீன வாழைத்
தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. அப்போதுதான் வாழைப்பழக் குடியரசு என்ற பெயர்
முதன் முதலில் அமர்த்தப்பட்டது.
நான் அந்த கடலோர இடத்தை அடைந்தேன். நான் சென்ற இடம் பியோர்டோ போ¢யாஸ்
என்பதாகும். அது ஒரு துறைமுகம், வெப்ப மண்டல கழிமுகப் பகுதி. பயணச்சீட்டு பா¢சோதகர்
கொசுக்களை அடித்து விரட்டியவாறு என்னை அணுகினார். கொசுக்கள் நம்மைத்
தின்றுவிடக் கூடிய அளவு இருக்கும். ஒரு கொசு கூட நம்மைக் கொன்று விடும். நான்
இதுவரைக் கடிவாங்கவில்லை. அங்கு பறவைகளையே காணவில்லை. எனக்கு அப்போது அனைத்து
உயிர்களினதும் வாழ்க்கை குறித்த பல்வேறு உண்மைகள் பு¡¢யத் தொடங்கின.
பல்லாயிரக்கணக்கில், கிலோமீட்டர் கணக்கில் வா¢சை வா¢சையாக இருந்த
வாழைச்செடிகள் தவிர அங்கு மிகப் பெரும் எண்ணிக்கையில் பச்சை நிறச் சீருடைகளை
அணிந்த படைவீரர்கள் உறுமும் வாகனங்களில் இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.
இப்பகுதி குவாதிமாலா சிகுட்டா வாழை நிறுவனத்தைச் சார்ந்தது. இது யுனைடெட்
புரூட் கம்பெனியின் நேரடி நிறுவனம். இந்த நிறுவனத்தை மக்கள் 'ஆக்டோபஸ்' என்று
அழைக்கின்றனர். ஏனெனில் இதன் கொடுக்குகளில் சிக்காத குவாதிமாலா மக்கள் யாருமே
இல்லை. 1899-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் வாழையை தோட்டப்பயிராக
வளர்த்து வாழை வணிகத்தில் மும்முரமாக இறங்கியது. 1949-ஆம் ஆண்டு இது 35
இலட்சம் ஏக்கர் தோட்டங்களை ஜமைக்கா, கியூபா, டொமினிகன் குடியரசுகள், பனாமா,
ஹோண்டுராஸ், நிகரகுவா, கொலம்பியா ஆகிய நாடுகளில் வளைத்துப் போட்டிருந்தது.
குவாதிமாலாவில்தான் அதிகபட்ச இடம் இருந்தது.
தொடரும்....
டேவிட் ரான்சம்
|