menu






 வணிகம் >> நியாய வணிகம்
 

வாழ்க்கைக்கு வேறு எந்தத் தொழிலும் செய்ய முடியாததால் கி¡¢கோ¡¢யோ காப்பிச் சாகுபடியில் ஈடுபட்டார். கொழுத்த வடக்குலக மக்கள் குடித்துத் தீர்க்கும் காப்பியை இவர் பெருமளவு விளைவித்துக் கொடுக்கிறார். ஆனால், இதை விற்றுப் பெரும் பணம் திரட்டும் வணிகர்கள் ஒரு முறை கூட காப்பி செடியைப் பார்த்திருக்க மாட்டார்கள். அது மட்டுமன்று வெப்ப மண்டல நாடுகளைச் சேர்ந்த 2 கோடி மக்கள் தங்கள் வாழ்க்கையையே காப்பிச் சாகுபடிக்காகக் கொடுத்துள்ளார்கள். ஆனால் காப்பித்தான் அவர்களுக்கு எதையுமே செய்யவில்லை.

தம்போபதா பள்ளத்தாக்கில் விளைந்து லண்டனிலோ, டொராண்டாவிலோ, நியூயார்க்கிலோ, சிட்டினியிலோ கிடைக்கும் 30 கிலோ காப்பியின் விலை 13,000 டாலர்கள் ஆகும். ஆனால் இதற்காக உழவர்களோ கூட்டுறவு அமைப்புகளோ பெறுவது வெறும் 70 டாலர்கள் மட்டுமே. அதாவது 180ல் ஒரு பங்குதான்.

தம்போபதா பள்ளத்தாக்கில் காப்பிச் சாகுபடி செய்வது மிகவும் கடுமையான பணி. மலை முகடுகளில் ஏறி இறங்கவேண்டும். இங்கு சாலைகள்கூட கரடு முரடாகத்தான் இருக்கும். ஆனால் இங்கு பாதுகாப்பான குடிநீர் போலவே கோக் கிடைப்பதுதான் வியப்பு.

நாங்கள் பமிலா என்பவரது பண்ணைக்குச் சென்றோம். அவர் தனது வீட்டில் எங்களுக்கு ஒரு சிறு விருந்தே ஏற்பாடு செய்திருந்தார். ஆரஞ்சு, பப்பாளி, பழச்சாறுகள், பூக்கள், மூலிகைகள் கோகோ போன்ற யாவும் இருந்தன. ஆனால் காப்பி மட்டும் இல்லை. காப்பிச் சாகுபடியாளர்கள் காப்பியை மாலை நேரத்தில் புத்துணர்வு பெற மட்டுமே அருந்துகின்றனர். பமீலாலின் கணவர் தமது காப்பிப் பண்ணையைப் பற்றி கூறினார்.

காட்டு மரங்களின் கிளைகள் கழிக்கப்பட்டு போதிய அளவு மட்டும் நிழல் விழுமாறு செய்யப்படும். ஒவ்வொரு பண்ணைக்கும் 7 ஏக்கர் நிலம் வேண்டும். அதில் ஒரு தளமேடை அமைக்க வேண்டும். காப்பியை உலர்த்துவதற்கு அது பயன்படும். பண்ணை வீட்டிற்காக பொலபொலப்பான மண் கெட்டியாக்கப்பட்டு சுவர்கள் எழுப்பப்படும். நல்ல தண்ணீரும் வேண்டும். இறுதியாக செடிகள் நடப்பட்ட பின்பு அவற்றை 3 ஆண்டுகள் கவனமாக வளர்க்க வேண்டும். இடையில் பிழைப்பிற்காக காய்கறிகள் வளர்த்துக் கொள்ளலாம். குழந்தை போல வளர்க்கப்படும் காப்பிச்செடியில் மூன்றாண்டுகள் கழித்து முதலில் கொட்டைகள் தோன்றும். இவ்வாறு கடும் உழைப்புடன் கூடிய இந்தச் சாகுபடியையும், நிலத்தையும் விட்டு விலக யாருக்கும் மனம் வராது.

இவை எனக்கு 15 ஆண்டுகள் பலன் தரும் என்று காப்பிக் கன்றுகளைப் பார்த்துக் சொன்னார் பாப்லோ, ஆம், காப்பிச் செடிகள் 30 முதல் 40 ஆண்டுகள் பலன் தரும் என்று சொல்லப்பட்டாலும் கூட அவை 15 ஆண்டுகளே நல்ல பலன் தரும். பின்னர் விளைச்சல் குறைந்துவிடும்.

காப்பியில் அறுவடைக்காலம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மிகவும் நெருக்கடி மிக்கது. நியாய வணிகம் வந்த பின்பு இவர்கள் அதற்காக சிறந்த கொட்டைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். மழை வந்தால் அவற்றின் தரம் பாதிக்கப்படும். சில சமயங்களில் அறுவடைக்காலத்தில் வாரக்கணக்கில் மழை பெய்யும்.

பறிக்கப்பட்ட காப்பி பழங்கள் காங்கி¡£ட் தொட்டிகளில் உள்ள தூய்மையான நீ¡¢ல் ஊறவைக்கப்படுகின்றன. ஊறிய பழங்கள் எடுக்கப்பட்டு களத்தில் சில மணிநேரம் காயவைக்கப்படுகின்றன. அதிலிருந்து ஒரு வாசனை வருகிறது. பின்பு பழங்கள் ஒரு பல்சக்கரக் கருவியில் போடப்பட்டு சுழற்றப்படுகின்றன. அப்போது அதிலிருந்து பழக்கூழ் வெளியேறுகிறது. இது மட்கு எரு உருவாக்கப் பயன்படுகிறது. கொட்டைகள் மேலும் நல்ல நீ¡¢ல் கழுவப்படுகின்றன. இவ்வாறு 5 முதல் 6 முறை செய்யப்படுகிறது. இது கையாலும் காலாலும் செய்யப்படுகிறது. இது மிகவும் கடின உழைப்பு மிக்க வேலையாகும்.

நன்கு கழுவப்பட்ட காப்பிக் கொட்டைகள் வெயிலில் 2-3 நாட்கள் நன்கு உலர்த்தப்படுகின்றன. வழக்கமான சந்தைக்குச் செல்லும் காப்பிக் கொட்டைகள் கருப்பு நிற சாக்குகளில் எடுக்கப்படுகின்றன. நியாய வணிகத்திற்கான காப்பிக் கொட்டைகளைக் காயவைக்கும்போது மரத்தினால் ஆன களங்களில் உலர்த்துகின்றனர். இதனால் இருபுறமும் காற்று சென்று கொட்டைகள் சீராக உலர்த்தப்படுகின்றன. உலர்ந்த கொட்டைகளை எடுத்து கையில் வைத்துக் கசக்கி உமி நீக்கி நிறத்தைச் சோதித்துப் பார்க்கின்றனர். ஈரமில்லாவிட்டால் காப்பிக் கொட்டை சாம்பல் கலந்த பசுமை நிறத்தில் இருக்கிறது. பின்பு இவை வெகுநாட்களுக்கு பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.

என்னிடம் அக்டேவியோ, உங்களுக்கு நன்றி நீங்கள்தான் முதன் முதலில் எங்களிடம் வந்து பேசிச்செல்லும் ஆங்கில பத்தி¡¢கையாளராக இருக்கிறீர்கள். உங்கள் மக்களுக்கு எமது வாழ்த்தைச் சொல்லுங்கள். காப்பியை விளைவிக்க நாங்கள் படும் துன்பங்களை எழுதுங்கள் என்றார். மேலும் அவர் இன்று நியுயார்க் சந்தையில் காப்பியின் விலை மூட்டைக்கு 143 டாலர்கள் வீழ்ச்சியடைந்து விட்டது என்றார். எனக்கு வியப்பாக இருந்தது எப்படி இது இவருக்குத் தொ¢யும் என்று நினைத்தேன். மேலும் அவர், எமது உழைப்புக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை. இந்த வருமானத்தில்தான் நாங்கள் குடும்பம் நடத்த வேண்டுமு;. கூலியாட்களுக்கு சம்பளம் தரவேண்டும். நாங்கள் மிகவும் தரமான, வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லி நஞ்சு கலக்காத இயற்கை முறையான காப்பியை விளைவித்துத் தருகிறோம். இதற்கு நல்ல விலை வேண்டும் என்றார்.

                                        தொடரும்....
டேவிட் ரான்சம்