menu






 வணிகம் >> நியாய வணிகம்
 

புதிய சந்தைகள்

கூட்டுப்பண்ணைகள் இணைந்து ஓர் சங்கத்தை உருவாக்கின. நாங்கள் அதிலிருந்து நிறையக் கற்றுக் கொண்டோம். ஆனால் நாங்கள் தப்பிப் பிழைக்க முடியவில்லை" என்றும் கூறினார் ஜோஸ். சங்கம் கடுமையான நெருக்கடிக்கு இலக்காகியது. ஜோஸ் ஒரு சிறு குழுவுடன் சேர்ந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று புதிய வழிமுறைகளைக் காண முனைந்தார். அவர்கள் வடக்குப் பகுதியில் உள்ள ஒவாக்சகா என்ற மாநிலத்திலுள்ள உழவர்களுடன் சேர்ந்து கலந்துரையாடினர். அவர்கள் காப்பியை விளைவித்து நெதர்லாந்திலுள்ள மாக்ஸ் ஹவேலார் என்ற நிறுவனத்திற்கு நியாய வணிக முத்திரையுடன் கொடுத்து வந்தனர்.

இக்குழுவினர் திரும்புகையில் அந்நிறுவனத்திற்கும் அதுபோன்ற பிற நிறுவனங்களுக்கும் காப்பி விளைவித்துக் கொடுக்க முடிவு செய்தனர். இதனால் வாங்குவோருக்கு விலை குறைவாக காப்பி கிடைத்தது. தரமும் இருந்தது.

இந்த உழவர்கள் சங்கமானது ஒரு பழைய பருத்திக் கிடங்கை வாங்கி அதில் காப்பியை பதப்படுத்தி இருப்பு வைத்துக் கொண்டது. இவர்களது விளைச்சல் யாவும் இன்றுவரை சாதாரணச் சந்தைகளுக்கே செல்கின்றது. 1989-ஆம் ஆண்டு ஏற்பட்ட காப்பி விலை வீழ்ச்சியின்போதுகூட நியாய வணிகம் சங்கத்தைக் காப்பாற்றியது. நான் அங்கு சென்றிருந்தபோது பி¡¢ட்டனிலுள்ள டிவின் டிரேடிங், காப்பி டைரக்ட் ஆகிய நிறுவனங்களுக்கும் அமொ¢க்காவிலுள்ள சில சிறந்த காப்பி வணிகர்களுக்கும் இங்கிருந்து காப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

நாங்கள் அடுத்தடுத்த நாட்களில் மோசமான சாலைகளின் வழியே குருஸ்டெல் ரோசா¡¢யோ என்ற இடத்திலுள்ள பண்ணைக்குச் சென்றோம். நாங்கள் வந்த செய்தியை அறிந்தவுடன் சில நண்பர்கள் வரவேற்றனர். காட்டு மரங்களின் நிழலில் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. தரை சமமாக்கப் பட்டிருந்தது, பாறைகள், கற்கள் அகற்றப்பட்டிருந்தன. உழவர்கள் பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் போன்ற ஏதுமின்றி உயிர்ம வேளாண்மை செய்திருந்தனர். கால்நடைக் கழிவுகள், இலைத்தழைகளால் மட்கு எரு உருவாக்கிக் கொண்டனர்.

நான் இவற்றால் ஆச்சா¢யமடைந்தேன்.

"நாங்கள் இதை நமது எதிர்காலத் தலைமுறைக்காகச் செய்கிறோம்" என்றார் சி¡¢லோ. அவர்தான் எனக்கு சுற்றிக்காட்டினார்.

தெற்குலக நியாய வணிகத்தை நான் சந்தித்த முதல் நிகழ்வு இதுவாகும். நான் இவர்களைப்பற்றி எழுதுவேன் என்றும் அதனால் மேலும் அவர்களது காப்பியை வடக்குலகில் மேலும் பலர் வாங்குவார்கள் என்றும் சொன்னேன். மாக்ஸ் ஹவேலாவும் டிவின் டிரேடிங்கும் சிறப்பாகச் செய்கின்றனர் என்பதில் ஐயமில்லை. இவர்கள் நல்ல பங்குதாரர்களாக சேர்ந்திருப்பதை உணர முடிகிறது என்று உழவர்கள் கருதினர். நியாய வணிகம் இல்லாவிட்டால் இவர்களது நிலை மிகவும் மோசமானதாக இருந்திருக்கும்.

நா·ப்டா ஒப்பந்தத்தின் ஓராண்டிற்குப் பின்பு மெக்சிகோவில் நிலைமை மிக மோசமாயிற்று. ஒராண்டு அவர்கள் தம் விளைச்சலை இழந்தனர். இதனால் உழவர் ஒன்றியம் மெக்சிகோ நகா¢ல் ஒரு விற்பனை நிலையத்தை ஏற்படுத்தியது. இதன்மூலம் தம் பணி குறித்து மக்களிடம் விழப்புணர்வை உருவாக்கியது. அவர்களின் வடக்குலக நாட்டுப் பங்குதாரர்கள் இப்போது அவர்களுக்கு நன்கு உதவுகின்றனர். இது மெக்சிகோ ராணுவ மிரட்டலையும் மீறி அவர்கள் வளர உதவியாக இருக்கிறது.

ஓராண்டு காலத்தில் மெக்சிகோ கடுமையான பொருளியல் நெருக்கடியைச் சந்தித்தது. வங்கிச் சேமிப்பை எடுக்க முடியவில்லை, சம்பளம் வெட்டப்பட்டது. வங்கிகள் மூடப்பட்டன. இவ்வாறாக நா·ப்டா சாதனைகள் நிறைவேறின.

சியோதத் ஜீவரெச் என்ற இடம் இப்போது தொழில்மயமாக்கப்பட்ட குற்றக் கொலைத்தளவாடங்கள் செய்யுமிடமாக மாறியுள்ளது. அத்துடன் போதை மருந்து புழங்குமிடமாகவும் மாறிவிட்டது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்று அதிபரான கார்லோஸ் சாலினான் மெக்சிகோவிற்கு எது நல்லது என்று அறிந்தும்கூட நா·ப்டா ஒப்பந்தத்தில் கையொப்பபமிட்டார். அவர் என்றும் ஜோசேலா அரண்மனையில் இருந்தது கிடையாது.

இப்போது அவர் நாடு கடத்தப்பட்டு கேவலப்பட்டுத்தப்பட்டு வாழ்கிறார். அவரது சகோதரர் கொல்லப்பட்டு விட்டார். ஆனால் இன்றும் சாலினாஸ் மெக்சிகோவில் நடைபெறும் போதை மருந்துச் தொழிலில் தொடர்புடையவராக உள்ளார். இவரது கட்சி 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ¦விளயேற்றப்பட்டது. முன்னாள் கோகோகோலா நிர்வாகி அதிபரானார். இவ்வாறாக தாராளமய வணிகம் மெக்சிகோவில் தனது பணியை முடித்துள்ளது.

                                        தொடரும்....
டேவிட் ரான்சம்