menu






 வணிகம் >> நியாய வணிகம்
 

நியாய வணிகத்தின் பிறப்பு

கடந்த 30 ஆண்டுகளாக மக்களிடம் பணியாற்றும் முன்னோடிகள் வணிகம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டபோது அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்தனர். இதற்குத் தீர்வுகாண பெருகிவரும் பன்னாட்டு வணிகத்தை எதிர்ப்பதா, வேண்டாமா? என்றும் தெற்குலகத்தில் உள்ள வறுமைக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? என்றும் சிந்தனை செய்யப்பட்டது. உற்பத்தி முறைகளை சனநாயகப்படுத்துதல், உடமையைப் பகிர்ந்துகொள்ளல், அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களை ஊக்கப்படுத்துதல், குழந்தை உழைப்பு தேவையற்றது என்பதை விளக்குதல், நிலைத்த சுற்றுச்சூழல் மற்றும் மனித உ¡¢மைகளை வலியுறுத்தல் போன்றவற்றைச் செய்தால் தீர்வுகாண முடியுமா அல்லது நுகர்வோர்களிடம் விழிப்பை ஏற்படுத்துவதன் மூலம் இது சாத்தியமா என்றெல்லாம் சிந்திக்கப்பட்டது.

நியாய வணிகம் என்பது புதிய சிந்தனையன்று. உலகமயமாக்கல் உருவாகத் தொடங்கியபோதே அதற்கு இணையாகத் தோன்றிய சிந்தனைதான் இது. 1970 கள் முதலே பல தொண்டு நிறுவனங்கள் தெற்குலக மக்களிடம் உள்ள கைவினைப் பொருட்களை வாங்கி வடக்குலக மக்களுக்கு விற்றுவந்தன. இப்படியான மாற்று (Alternative) விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

நிகரகுவா போன்ற நாடுகளில் இருந்து காப்பி போன்றவை இவ்வாறு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வாங்கி விற்கப்பட்டன. விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி சேகா¢க்கவும் இது பயன்படுத்தப்பட்டது. அண்மைக்காலமாக வெப்பமண்டல உணவு பொருட்கள் வழக்கமாக கடைகள் மூலமும் சந்தைப்படுத்தல் முறைகள் மூலமும் விற்கப்படுகின்றன. இதனாலும் பிரச்சார விளம்பரங்களாலும் சிறப்பங்காடிகள் (Super Markets) போன்றவற்றிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியாயமற்ற தாராள வணிகம்தான் இப்போது சோதனை ¡£தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது எவ்வாறு யாருடைய பொருளை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்தக் வழிகாட்டிக் கையேடானது எளிய முயற்சியாகத் தொடங்கப்பட்டுள்ள நியாய வணிகம் நன்றாக வளர்ந்து பெருக வேண்டும்மென்பதற்காக எழுதப்பட்டுள்ளனது. ஆய்வாளர்களும் சிந்தனையாளர்களும் இதுவரையிலும் இதுகுறித்து சிறிதளவே கவனம் செலுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக, இது குறித்து சில நூல்களே வெளிவந்துள்ளன. எனவே மாற்று இல்லை என்று புலம்பிவரும் இன்றைய சூழலில் மாற்று உள்ளது. என்று கூறி அவற்றை நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்த உதவும் முகமாகவே இது வெளியிடப்படுகிறது. பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் இன்றைய சூழல் விளக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

மெக்சிகோவை எடுத்துக்கொண்டால், வடஅமொ¢க்க தாராளமய வணிக ஒப்பந்தத்தில் (NAFTA) கையெழுத்திட்ட மெக்சிகோ வரலாற்றில் அண்மைக்காலத்தில் நெருக்கடியைச் சந்தித்தது. தெற்குலக நாடுகளில் அமொ¢க்காவுடன் நேரடியாக எல்லைத் தொடர்புடைய நாடாக இருப்பது மெக்சிகோவே. மெக்சிகோவின் சியபாஸ் மாகாணத்தில் 1994-ஆம் ஆண்டுக்கு முந்தைய காப்பி சாகுபடியாளர்களின் நிலையைப் பார்த்தோமானால் பல உண்மைகளை நாம் அறியலாம். அப்போது முதலே மேலெழுந்த அலைதான் இன்றுவரை உலகில் தொடர்கிறது. முதல் அத்தியாயம் இதுபற்றிக் கூறுகிறது.

இரண்டாவது அத்தியாயம் சர்வதேச காப்பி ஏற்றுமதியில் முக்கிய இடம் வகித்த பெரு நாட்டின் நிலைமை பற்றிக் கூறுகிறது. உள்ளுர்ச் சூழலில் சர்வதேச வர்த்தகம் ஏற்படுத்திய தாக்கங்களையும் இதில் காணலாம். மூன்றாம் அத்தியாயம் கானா பற்றியது. கோகோ ஏற்றுமதியில் ஈடுபட்டுவரும் இந்நாடு தனது அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் இதையே நம்பியுள்ளது. சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி போன்றவற்றால் முன்வைக்கப்பட்ட அமைப்பைச் சா¢க்கட்டும் திட்டத்தால், இந்நாடு பட்ட துன்பங்களை இப்பகுதி கூறுகிறது.

வாழைப்பழமானது பல்வேறு குடியரசுகளுடன் போர்களுடனும் தன் பெயரை பதித்துள்ளது. நான்காம் அத்தியாயம் அண்மையில் நடு அமொ¢க்காவிலும் கா¢பியனிலும் நடந்த வாழைப்பழம் போர் பற்றிக் கூறுகிறது.

ஐந்தாம் அத்தியாயத்தில் நுகர்வியம் பற்றி விவா¢க்கப்படுகிறது. ஆடம்பரமான வணிக முத்திரைகள் உண்மையிலேயே தமது வாக்குறுதியை நிறைவேற்றுகின்றனவா என்பது குறித்தும் இந்த அத்தியாயத்தில் காணலாம்.

முன்னேற்றப்பாதையில் நியாய வணிகம்

இவையெல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக இதழ்களில் வெளியிடப்பட்டு வந்தவையே. அவை இப்போது ஒரு நூலாக உருவெடுத்துள்ளன. இதில் கோகோ பற்றிய கருத்துகள் மட்டும் எனது நண்பரான, டொரான்டோவில் உள்ள ¡¢ச்சர்ட் ஸ்வி·ப்படால் எழுதப்பட்டவை.

வணிகம் என்பது மக்களின் நலம் சார்ந்து இருக்க வேண்டுமேயல்லாது, ஒரு சிலா¢ன் பைகளை நிரப்புவதற்காக இருக்கக்கூடாது. உண்மையில் என்ன நடக்கிறது. என்பதை பின்வரும் பகுதிகள் எடுத்துரைக்கின்றன.

                                        தொடரும்....
டேவிட் ரான்சம்