menu






 வணிகம் >> நியாய வணிகம்
 

நியாய வணிகம்

இதில் உலகளாவிய வணிகத்தின் வரலாற்றைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். எவ்வாறு 'தாராள' வணிகமும் (Free Trade) அதன் சட்டதிட்டங்களும் நடைமுறைக்கு வந்துள்ளன என்றும், அதன் விளைவுகளுக்கு ஆட்படப் போகின்றவர்கள் யார் யார் என்றும் இதில் காண்போம்.

சமாதானமோ, போரோ வணிகத்தைப் பொறுத்தவரையில் எல்லாமே நியாய வணிகம் என்ற சொல்லில் வெளிப்படைத் தன்மையும், முரண்பாட்டுத் தன்மையும் உள்ளதைக் காணலாம். விற்கின்ற ஒருவா¢டமிருந்து ஒருவர் தனக்கு வேண்டியதை மனம் விரும்பி வாங்கிக்கொள்வது வெளிப்படைத் தன்மையாகும். இதில் தன்னார்வமான ஒப்புதல் உள்ளதால் இது நியாயமானதாகிறது. மற்றொரு கூறான முரண்பாட்டுத் தன்மையில் வணிகமானது இயற்கையாகவே சந்தை சக்திகளால் (Market Force) முறைப்படுத்தப்படுகிறது. இங்கே தனிநபா¢ன் விருப்பம் முன்னிறுத்தப்படுவது இல்லை. நீங்கள் சந்தையின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. ஒழுக்கம் என்பதெல்லாம் இல்லாமல் போகிறது.

இந்தப் பழைய முறையானது தனியு¡¢மை பெற்றுவிட்ட வணிக உலகில் நகைப்புக்கிடமாகி விடுகிறது. சந்தையை ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டமே உருவாக்கினாலும் கூட அந்த அமைப்பு முறையை அவர்களே கூட உட்புகுந்து மாற்றிவிட முடியாது. சுற்றுச்சூழலும் சந்தையும் ஒன்றையென்று அழிக்கப் பார்க்கும்போது அவற்றிற்கிடையிலான உறவு என்னவாக இருக்கும்? சந்தையும் வணிகமும் மனிதர்களால் கட்டமைக்கப்பட்டவை. எனவே மக்களின் தோல்விகளுக்கேற்ப அவையும் தொய்வுறும். ஆனால் இவற்றில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்.

வணிகத்தில் என்ன நியாயம் உள்ளது? இப்படி யார் சொன்னாலும் ஏன் நாம் அதை நம்ப வேண்டும்? பின்வரும் எளிய இரண்டு வினாக்களை எழுப்பி இதனை சோதனை செய்து பார்த்துவிட முடியும்.

1. இதில் யாரெல்லாம் பயன்பெறுகின்றனர்?
2. யாரெல்லாம் இதற்குப் பொறுப்பாளிகளாக உள்ளனர்?

இன்றுள்ள கட்டற்ற தாராள வணிகத்தில் பயன் பெறுபவர்கள் பணக்காரர்களும், அதிகாரமிக்கவர்களுமே. இதை வேறுவகையில் சொன்னால், காப்பு¡¢மை பெற்ற நியாயமற்றவர்களே பயன்பெறுவர். அதேபோல் பொறுப்புள்ளவர்கள் என்று யாருமே கிடையாது. நியாயமற்ற வணிகமானது மக்களாட்சியில் பெறுப்புத்தன்மையை கொன்றழிக்கக்கூடிய எதி¡¢யாகும். ஆனால், நியாய வணிகம் அனைவா¢ன் நன்மையையும் கருதி, இந்தப் போக்கை மனிதர்கள் கட்டுப்படுத்துவதற்கான தன்மையை உறுதி செய்கிறது.

இந்த முடிவுகளுக்கு நம் வருவதற்கான காரணத்தை வரலாறு நமக்கு கூற முடியும். 'Trade' என்ற சொல் ஆங்கில மொழியில் மிகக்குறுகிய வரலாற்றையே கொண்டது. இது முதலில் மக்கள் நடந்து சென்ற பாதையைக் குறித்தது. 14-ஆம் நூற்றாண்டில் இருந்து கப்பல் போக்குவரத்தைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. பின்னர் அது ஒரு வாழ்க்கை முறையைக் குறிக்கப் பயன்பட்டது. ஏறத்தாழ 200 ஆண்டுகளின்பின் "வணிகத்தைப் பின்பற்றக் கூடியவர்" என்ற பொருளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அதாவது, கொல்லர், தச்சர், தையற்காரர் என்ற வகையில் திறனாளர் (Professional) மற்றும் தொழி¢லாளர் (Laborer) என்பதாக வகுப்பு அடுக்குமுறைக்காகப் பயன்பட்டுள்ளது. பல பழைய புகழ்பெற்ற உணவு விடுதிகளில் 'Trade men's Entrance' என்ற அறிவிப்புப் பலகைகளைக் காணலாம். 20-ஆம் நூற்றாண்டில்தான் பொருள்களை வாங்கவும் விற்கவுமான வணிகத்திற்கு இப்பெயர் குறிக்கப்பட்டது. ஒரு வாழ்க்கை முறை என்பதை பணம் பண்ணும் முறை என்று மாற்றியதுபோல நாம் இப்போது வணிகத்தை மாற்றவது குறித்துப் பு¡¢ந்துகொள்ள வேண்டும்.

'Free' என்ற இந்தப் பெய்ரைடைச் சொல் (adjective) சொற்களில் இணையும்போது பாரம்பா¢ய பொருளாதார முறையில் மேலும் பல சில்கல்களை உருவாக்குகிறது. 19-ஆம் நூற்றாண்டில் தொழில்மய முதலாளித்துவமானது ஐரோப்பிய பேரரசுகளால் அடக்குமுறை மூலம் உலகம் முழுவதும் பரவியது. அவர்கள் படை நடத்தியும், வன்முறை வெறியாட்டங்கள் நடத்தியும் இதை நிறுவினார்கள்.

எதிர்ப் பேரரசுகளுடனான வணிகப் பா¢மாற்றங்கள் தடை செய்யப்பட்டிருந்தபோதிலும்கூட அவர்கள் பல்வறு பெருவணிகச் செயல்பாடுகளை (Mercantalist) நடத்தியுள்ளனர். அவர்களது வெளிநாட்டு வணிகத்தின் ஒட்டுமொத்த நோக்கம் தங்கள் காலனிய அதிகாரத்தை ஊக்கப்பபடுத்துவதும், நிலைநாட்டுவதும் மட்டுமே. இதில் ஸ்பெயின், போர்சுக்கல், பிரான்சு, பி¡¢ட்டன், ஹாலந்து என்று யாரும் விதிவிலக்கல்ல. முதலாளிகள் புதிய தொழிற்சாலையை இயக்க முடியாது என்ற நிலை நிலவியது. ஆனால் இந்த அடிமை உழைப்பு, ஊரகப் பகுதிகளிலும், வேளாண்மையிலுமே ஆதாயம் மிக்கதாக இருந்தது. தொழில்மையப் பகுதிகளில், நகரங்களிலும் லாபகரமாக இல்லை. தொழிலதிபர்கள் எந்திரமயத்தை விரும்பினர். அமொ¢க்க சுதந்திரப் போருக்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது.

பெருந்தேக்கநிலை

செல்வம், அதிகாரம், தன்னார்வம் போன்றவற்றை ஒழுங்கமைக்கின்ற நிலையிலிருந்து பாரம்பா¢ய பொருளியில் முறையைப் பி¡¢த்துப் பார்ப்பது என்பது இயலாத கா¡¢யம் இதைப்பற்றி எவ்வளவு சிந்தித்துப் பார்த்தாலும் முடிவில் தாராள வணிகம் என்பது பொருளற்றதாகவே தோன்றும். ஏனெனில் தடையற்ற தாராள வணிகம் இதுவரை இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை. இது பற்றிய தெளிவான வெளிப்பாடுகளை முதலாளித்துவம் அடிவாங்கும்போதும் பொருளியத் தேக்கநிலை வரும்போதும் காணலாம்.

இதை 1930 களிலும், இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் நன்கு பார்த்தோம். இன்றுள்ள தாராளமய ஆதரவாளர்களும் ஆட்சியாளர்களும் தமது நாட்டுத் தொழில்களைக் காப்பாற்ற, வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கு எதிராக வா¢களை அதிகப்படுத்தியும் சட்டத்திட்டங்களை உருவாக்கியும் உலகளாவிய வணிகத்தில் இருந்து தமது நாட்டை வேலியிட்டுத் தடுத்துக்கொள்ளவேண்டும் என்பார்கள். அதற்கு 'பாதுகாப்பியம்' (Protectionism) என்று கூறுகின்றனர். இது மிக மோசமானதொரு பெயராகும்.

இன்றைய உலகமயமாக்க சூழலில் ஏற்பட்டுள்ளது போன்றே 1930 களில் பெருமளவு வேலைவாய்ய்பின்மை உருவாகி தேசிய அரசுகள் சிக்கலைச் சந்தித்தன. உண்மையில், முதலாளித்துவ அமொ¢க்காவில் 1940 களில் ஏற்பட்ட சிக்கல் பெருமளிவில் வேலைவாய்ப்பிற்கான திட்டங்களை உதவிகளாக வழங்கிய பின்னர்தான் தீர்ந்தது. 1930கள், 1940களில் ஏற்பட்ட பட்டறிவிற்கு பின்னர் தொழில் மயமாக்கமானது. ஐரோப்பா ஆப்பி¡¢க்காவிலும் ஆசியாவில் உள்ள புதிதாக விடுதலை பெற்ற காலனிய நாடுகளிலும், இலத்தீன் அமொ¢க்க நாடுகளிலும் 1950களிலும் 1960 களிலும் (மிகவும் கவனமாக) நடந்தேறியது. தொழிற்சாலைப் பொருட்களுக்காக உலகளாவிய சந்தையை வி¡¢வாக்குவதையும், தேசங்களைக் கட்டடமைப்பதையும் செய்தால் விரைவாக அனைவருக்கும் ஆதாயம் தரும் என்று இவ்வகையில் உணரப்பட்டது. தெற்குலகு நாடுகளில் 'இறக்குமதி மாற்று' (import Substitution) ஊக்குவிக்கப்பட்டது. தாமாகவே தொடக்க நிலைத் தொழிற்சாலைகளை அமைத்தும், வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கு கூடுதல் வா¢விதித்தும் அரசுகள் திட்டம் தீட்டின. சாப்பான், ஹாக்காங், தைவான், சிங்கப்பூர், தென்கொ¡¢யா போன்ற சில நாடுகளில் இது நன்கு செயல்பட்டது. இறக்குமதிக்குத் தடைவிதித்த இந்நாடுகள் தமது புதிய தொழிற்சாலைகள் மூலம் உலகம் சந்தைக்காக ஏற்றுமதியை முன்னிறுத்தி பொருட்களை உற்பத்தி செய்தன. பிற நாடுகளில் இம்முயற்சி மிக மோசமாக இருந்தது. திறனற்ற தொழிற்சாலைகள் அதிக மானியம் பெற்று உள்ளுர் சந்தைக்காக உற்பத்தி செய்தன. கடைசியாக அழிந்தன. அக்காலம் உலகளாவிய வணிகத்திற்கும், உலக பொருளாதாரத்திற்கும் பொற்காலம் எனப்படுகிறது.

                                        தொடரும்....
டேவிட் ரான்சம்