menu






 ஆன்மீகம் >> திருமால் துதி

திருமால் துதி


 

 

ஆனை முகத்தவனும் தஞ்சியம்மனும் துணை!
திருமலைவாசன் திருவடி பணிந்தேன்!


எழில் மலையாம் ஏழுமலையதனில் எழுந்தருளி
ஏத்தி துதிப்போர்க்கு ஏற்றம் தரும் எழில்வடிவானவனே!
என்னவனே, எமையாளும் அன்னை படியம்பட்டாளின்
பாசமிகு சோதரனாய் பார்காக்கும் பக்தவச்சலனே, பாண்டுரங்கனே!
பாடிப்பரவும் பாவலர்க்கும், பாவையர்க்கும், பாமரர்க்கும்
பா¢வுகாட்டிடும் பரம்பொருளாம் பத்ம நாபனே.
பா¢னைக்காத்து பாவியெனையும் காருமம்மா!
காசினியோர் கண்டு வணங்கிடும் காருண்சீலனே,
கார்மேக வண்ணனாய் கருணை காட்டிடும் கலியுகக் கண்ணனே!
இரம்மியமான இயற்கை இயைந்தோடும்
எழில் மலையிலே ஏற்ற முடன் வீற்றிருக்கும் வித்தகனே!
திரு நாமம் ஜொலித்திட திருமலையில் திருவருள் திருவேங்கடமலையானே!
எம் தீவினைதீர்த்திடுவாய் தீதறுக்கும் திருமாலே!
திருமகள் வாசா, திருமகள் நேசா, எமைக்காப்பாய் சீனுவாசா!
கபடநாடக மாடிடும் கலியுகக் கண்ணனே
கருணை காட்டி காத்தருள்வாய் கடையேன் கார்த்திகேயன் எமையே!
திருமால் திருவருளும் திருமகள் அருளும் நின் சோதா¢ பார்வதியின்
பா¢பூர்ண அருளும், பாலமுருகனருளும் பாவியேனுக்குக் கிடைத்திட வேண்டுமப்பா!
எம்மாயைதனை மாற்றி எம் வாழ்வில் மாற்றம் தருவாயப்பா!
வையகத்தை வாழ்விக்க வந்துதித்த வரதராச்ப் பெருமானே!
வாழ்வளிப்பாய்,வரமளிப்பாய் வணங்கிடும் வையகத்தார் தமக்கே!
நின் சோதா¢யின் பா¢வும் நின்பா¢வும் பாவியேனுக்கு
பா¢பூரணமாய் கிடைத்திட நல்வழி காட்டிடுவாய்!
நாடோர் நாளும் நாடிடும் நாராயணனே!
நலமும் வளமும் அருள்வாய் நாலாயிரதிவ்ய பிரபந்தம்
போற்றிப் பாடிடும் பார்காக்கும் பரந்தாமனே!

இறையருட் கவிஞர்
ஆசி¡¢யர் ச. கார்த்திகேயன், பி.ஏ.

 


முகப்பு பக்கம்
பகவான் பட்ட கடன்
முக்திக்கு வழி
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
எழுந்திரு!
புத்தா¢ன் வைராக்கியம் - ரமணர்
அஞ்சல் வழி சமணக் கல்வி
இயேசு
திருமால் துதி
திருவள்ளுர் ஆண்டு கணக்கிடும் எளியமுறை
108 போற்றிகள்!
மகாவீரர்
அருள் மொழிகள்
பிரஹலாத வரதன்
பகவத் கீதை
அஹிம்சை சொற்பொழிவு
சிவபூஜைப் பலன்கள்
அகிம்ஸை வழங்கும் செய்தி
அறிக : நாம் ஜைனர்களா
இஸ்லாம் போற்றும் கருணை
பிறவிப் பெருங்கடல்
கிருஸ்துவம் போற்றும் கருணை
பலி இடுதல்
சில தகவல்கள்
சமணம் - வள்ளுவம்
உத்திராட்சம் அணிவது ஏன்?