|
இயேசு - இன்னுலகை இரட்சித்திட்ட இரட்சகன்!
|
|
|

|
|
காசினியில் காருண்யம் கனிந்திடவே, எழுந்தருளிய ஏசுபிரான் ஏற்றம்தனை,
காசினிக்கு களிப்புடனே கன்னித்தமிழில் காணிக்கையாக்குகிறேன் தானே!
கொடுங்கோலாட்சியில் குதூகலமுடன் குழந்தையாய்
அலர்ந்து அகிலமதற்கு அருள்பாலித்திட,
அ¡¢ய அவதார புருஷனாய் எழுந்தவரே ஏற்றமிகு எளிமைமிகு ஏசுபிரானாகும்!
மாஞாலம் மாண்புறவே மாட்டுத் தொழுவத்தில்
மலர்ந்திட்டமாமகன்தான் ஏசுபிரானாகும்!
எளியகுடும்பத்தில் அவதாரம் செய்து, அருஞ்செயல்தனை அவனி தனக்கு
அள்ளித் தெளித்திட்ட அற்புதமகன்தான் ஏசு!
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் ஏற்றமிகு கொள்கையைக்
கொண்டுநிற்கும் தமிழ் மறைக்கு, தக்க சான்றாகி
நின்றவர்தாம் சான்றாளன் ஏசுபிரான்!
அல்லல்பட்டு ஆருயிர் அழியுங்காலை, அறியா மாந்தருக்காக,
அறியாமல் அவர்செய்கின்ற பிழைதனைப் பொறுத்தருளுமாறு
பரமபிதாவைப் பணிந்தவர்தாம் பண்பாளன் ஏசு!
குஷ்ட நோயால் நொந்திட்ட நோயளிக்கு நன் மருந்திட்டு,
நலம் பெறச்செய்திட்ட நன் மகனார்தாம் ஏசு!
பன்னிரு சீடர்க்கும் பாங்கான, பண்பான கொள்கைகளை
போதித்தவர்தாம் போற்றுதற்கா¢ய ஏசுபிரான்!
காட்டிக் கொடுத்திட்ட கயவனாம் சீலமிலா சீடனுக்கும்,
அருள் பாலித்திட்ட அ¡¢ய மகன்தான் அவனியோர்
அன்புடன் ஆராதிக்கும் ஏசுபிரான்!
பரமபிதா பா¡¢னுக்குப் பகர்ந்தருளிய பண்பியல்தனை
நெஞ்சமலா¢ல் நெகிழச்செய்து, மனித நேயத்தையும் நேசித்து,
வையகத்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுலகு செல்வோமாக!
போற்றி! போற்றி! தஞ்சியம்மனின் தண்ணளி போற்றி!
போற்றி! போற்றி! ஏசுவின் எழிலார் பாதம் போற்றி!
இறையருட் கவிஞர்
ஆசி¡¢யர் ச. கார்த்திகேயன், பி.ஏ.