|
பகவத் கீதை
(ஆன்மீகத் தொடர்) |
|

|
முதல் அத்தியாயம்
அர்ச்சுன விஷாத யோகம்
(அர்ச்சுனன் மனச் சோர்வு)
த்ருதராஷ்ட்ர உவாச----
தர்ம§க்ஷத்ரே குரு§க்ஷத்ரே ஸமவேதா யுயுத்வை:|
மாமகா: பாண்டவாச்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய|| 1
திருதுராட்டிரன் சொன்னது :
1. சஞ்சயா! குரு§க்ஷத்திரமாகிய புனித பூமியில் என் மக்களும் பாண்டுவின் மக்களும்
போர் செய்யும் விருப்பத்துடன் வந்து சேர்ந்தபோது என்ன செய்தார்கள்?
ஸஞ்ஜய உவாச---
த்ருஷ்ட்வா து பாண்டவானீகம் வ்யூடம் துர்யோதனஸ்-ததா|
ஆசார்ய-முபஸங்கம்ய ராஜாவசன-மப்ரவீத்||
சஞ்சயன் சொன்னது:
2. பாண்டவர்களின் சேனை அணிவகுத்து நிற்பதைக் கண்டதும் து¡¢யோதனன் தன்னுடைய
குருவாகிய துரோணா¢டம் சென்று இவ்வாறு சொல்லத் தொடங்கினான்.
பச்யைதாம் பாண்டுபுத்ராணா-மாசார்ய மஹதீஞ் சமூம்|
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ சிஷ்யேண தீமதா|3
3. குருவே தங்களுடைய அறிவாளியான சீடன் துருபத குமாரனால் அணிவகுத்து
நிறுத்தப்பட்டுள்ள வலிமைமிக்க பாண்டவ சேனையை பாருங்கள்.
அத்ர சூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுன-ஸமா யுதி|
யுயுதானோ விராடச்ச த்ருபதச்ச மஹாரத:||4
4. பீமன், அர்ச்சுனன், சாத்யகி, விராடன், துருபதன் ஆகியவர்களுக்குச் சமமாகப்
போ¡¢ட வல்லவர்களான வலிமைமிக்க வில் வீரர்களும், தேர் வீரர்களும் இங்கே
இருக்கின்றார்கள்.
த்ருஷ்டகேதுச் சேகிதான: காசிராஜச்ச வீர்யவான்|
புருஜித் குந்திபோஜச்ச சைப்யச்ச நரபுங்கவ: ||5
5. போ¡¢ல் மிகவும் சிறந்தவர்களான திருஷ்டகேது, சேகிதனன், காசிராஜன், புருஜித்,
குந்தி போஜன், சைப்யன் ஆகியவர்களும் உள்ளனர்.
தொடரும்...
திரு. R. வரதராஜன் B.A., B.T.