|
திருவள்ளுர் ஆண்டு கணக்கிடும் எளியமுறை |
தி.பி = திருவள்ளுவர் பிறந்தபின்
கி.பி = கிறித்து பிறந்தபின்
கி.பி 2006 + 31 = 2037 தி.பி.
4, தை - 2037 (தி.பி) 17-1-2006 (கி.பி)
ஆனால் இது மார்கழி பிற்பகுதியில் அதாவது மார்கழி 17 முதல் (1-1-2006) முதல்
தைமாதம் 1ந் தேதிவரை (14-1-2006) வரை பழைய கிறித்துவ ஆண்டாகிய 2005 + 31
கூட்டவேண்டும் மட்டும் என்பது சிறப்பான, கூர்ந்துகவனிக்க வேண்டிய விதியாகும்.
அந்த 14 நாட்கள் மட்டும் ஆங்கில புத்தாண்டிற்கும் தமிழ் புத்தாண்டிற்கும் உள்ள
வேறுபாடாகும். மற்ற மாதங்களில் கிறித்து பிறந்த ஆண்டுடன் + 31 ஆண்டுகளைக்
கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் திருவள்ளுவர் ஏசுகிறித்து பிறப்பதற்கு 31
ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்பது தமிழ்ச் சான்றோ¡¢ன் முடிவாகும்.
இறையருட் கவிஞர்
ஆசி¡¢யர் ச. கார்த்திகேயன், பி.ஏ.