menu






 ஆன்மீகம் >> அறிக : நாம் ஜைனர்களா?

அறிக : நாம் ஜைனர்களா?

(சங்கங்கள் பல அமையுங்கள்! ஆனால் சா¢த்திரத்தைக் கற்றுக் கொடுங்கள்)

1. ஏழு வியசனங்களை விட்டிருப்பவர் ஜைனர்

(ஏழு வியசனங்கள்: சூது, வேட்டை, திருடு, கள், புலால், பிறர் மனைவிருப்பம், வேசியர் தொடர்பு)

2. இரவில் உண்ணாது இருப்பர் ஜைனர்

( இரவு நேரத்தில் ஜீவ உற்பத்தி அதிகம். அதனால் உண்ணல், தின்னல், நக்கல், குடித்தல் என நால்வகை உணவையும் விடுதல் வேண்டும் அல்லது பயிற்சிக்காக குடித்தல் பொருளை நீக்கி மற்றைய மூன்றையும் விடலாம்)

3. தோல் பொருளை விலக்கி இருப்பர் ஜைனர்

(ஜைனர்களுக்காக மட்டும் செருப்பு, பெல்ட், நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக் முதலானவை தயா¡¢க்க லட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் ஆண்டுதோறும் கொல்லப்படுவதாக கூறப்படுகிறது. அதனால் கெட்ட பிறவிகளை தவிர்க்க இவற்றை கை விட வேண்டும்.)

4. கெட்ட வியாபாரம் செய்யாது இருப்பர் ஜைனர்

(கள், மதுக்கடை நடத்துதல், தோல் பொருளை விற்றல், சிகரெட், பீடி முதலானவற்றை விற்றல், விஷம், கத்தி, துப்பாக்கி போன்ற கொலைக் கருவி விற்றல் செய்யாது இருத்தல் வேண்டும்).

5. முட்டை உண்ணலும் விற்றலும் செய்யார் ஜைனர்

(முட்டை, சேவல் கோழி சேர்க்கையால் தோன்றும் அசுத்த பொருளால் உண்டாகிறது. கோழி வயிற்றில் இருக்கும்போதே அதில் உயிர் வந்து தங்கி விடுகிறது. முட்டை வெளியே வந்த பிறகு அதில் சுவாசம்; காண முடியும் என்று அமொ¢க்க டாக்டர் கூறியுள்ளார். அதனால் முட்டை எப்படி தாவர உணவாகும்? அதை விற்றல் மாமிசம் விற்றல் ஆகும். அதனால் மிகக் கீழான கதிக்கு காரணமாகும்.)

6. தீட்டு காலத்தில் சுத்தியோடு இருப்பர் ஜைன தாய்மார்

(தீட்டு தொடக்கம் முதல் 96 மணிநேரம் ஜைன தாய்மார் குடும்பத்துக்காக உணவு தயா¡¢த்தல், பஞ்ச பரமேஷ்டி தா¢சனம் செய்தல், பூஜாதி செய்தல், சாஸ்திரம், ஜப மாலை தொடுதல் - இவற்றைச் செய்தல் இல்லை)

7. குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையும் கருச்சிதைவினையும் செய்யார் ஜைனர்.

(குழந்தைகள் பிறத்தல் ஜைன தர்மத்துக்கு வளர்ச்சியாகும். குடும்பக் கட்டுப்பாட்டுக்காக அறுவை செய்தல் ஆகமத்திற்கு எதிரானது. அதனால் பிரம்மசா¢யம் வழி குடும்பக்கட்டுப்பாடு செய்யலாம். கருவைச் சிதைத்தல் (Abortion) பஞ் சேந்தி¡¢ய மனித கொலையாகும். அதனைச் செய்வோர் தரும கா¡¢யங்களை செய்ய வேண்டுமானால் பொ¢ய பிராயச்சித்தங்களை எடுக்கவேண்டி வரும்)

8. நீரை வடித்துக் குடிப்பர் ஜைனர்

(ஒரு துளி நீரில் 36450 ஜீவன்கள் இருப்பதாகக் அறிவியலார் கூறுகின்றனர். ஆனால் ஜைன தருமம் இதைக்காட்டிலும் அதிகமாக கருதுகிறது. அதனால், அஹிம்சையை போற்றவும், உடல் நலம் வேண்டியும் நீரை வடித்து குடித்தல் வேண்டும்.)

9. தேங்காயை முழுதாக பகவானுக்கு அர்ப்பணிப்பர் ஜைனர்

(தேங்காயை உடைத்தல் பலியிடுதல் பாவனையாக கருதப்படுகிறது. மேலும் உடைத்த தேங்காய் பகுதியை எடுத்துச் சென்று உண்ணுதல் நிர்மால்யம் உண்ணுதலாக கருதப்படுகிறது. அதனால் இவற்றை தவிர்க்க வேண்டும்)

10. தோட்டம் (செளச்சம்) சென்று வந்த பிறகு சுத்தம் செய்வர் ஜைனர்

(செளச்சத்துக்கு வெளியே செல்லும் போது சொம்பில் நீர் கொண்டு செல்ல வேண்டும். போய் வந்த பிறகு அல்லது டாய்லெட்டுக்கு போய் வந்த பிறகு மண் அல்லது சோப்பால் கை கால்களை மூன்று முறை நன்கு கழுவ வேண்டும்.)

11. பீடி, சிகரெட், குட்கா, புகையிலை முதலான போதை பொருள்களை பயன்படுத்தாதவர் ஜைனர்

(புகையிலையில் "நிக்கோடின்" எனும் விஷப் பொருள் இருக்கிறது. அதனால் புற்றுநோய் உண்டாகிறது. ஒரு சிகரெட் பிடித்தால் 18 நிமிடம் ஆயுள் குறைகிறது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். குட்காவில் பல்லியின் வால் போதைக்காக கலக்கப்படுகிறது. அதனால் புற்று நோய் முதலானவைகள் ஏற்படுவதாக கூறியுள்ளனர்)

12. பஞ்ச பரமேஷ்டி, நான்கு அடைக்கலம் ஏற்பவர் ஜைனர்

(நம்முடைய பூர்வ மகான் ஆசா¡¢யர்கள் அருகர், ஸித்தர், ஆசா¡¢யர், உபாத்தியாயர், சாதுக்களுக்குத்தான் "ணமோ, ணமோ" (நமோஸ்து) கூறியுள்ளனர். ஆறாவதாக யாரையும் கூறவில்லை. "சத்தா¡¢ சரணம்" - நான்கு அடைக்கலத்தில் அருகர், சித்தர், சாது ஜிநர் அருளிய தருமம் (ஆகமம்) கூறியுள்ளனர். ஆசை முதலான உடைய வேறு தேவ தேவியர்களையோ ஏசி கார் முதலான பா¢க்கிரகங்களை உடைய மடாதிபதிகளையோ அடைக்கலமாக கூறவில்லை.)

பகவான் மகாவீரர் 2600 -ம் ஜென்ம கல்யாண விழா ஆண்டு வெளியீடு
(6-4-2001 - 5-4-2002.)

 


முகப்பு பக்கம்
பகவான் பட்ட கடன்
முக்திக்கு வழி
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
எழுந்திரு!
புத்தா¢ன் வைராக்கியம் - ரமணர்
அஞ்சல் வழி சமணக் கல்வி
இயேசு
திருமால் துதி
திருவள்ளுர் ஆண்டு கணக்கிடும் எளியமுறை
108 போற்றிகள்!
மகாவீரர்
அருள் மொழிகள்
பிரஹலாத வரதன்
பகவத் கீதை
அஹிம்சை சொற்பொழிவு
சிவபூஜைப் பலன்கள்
அகிம்ஸை வழங்கும் செய்தி
அறிக : நாம் ஜைனர்களா
இஸ்லாம் போற்றும் கருணை
பிறவிப் பெருங்கடல்
கிருஸ்துவம் போற்றும் கருணை
பலி இடுதல்
சில தகவல்கள்
சமணம் - வள்ளுவம்
உத்திராட்சம் அணிவது ஏன்?