|
புத்தா¢ன் வைராக்கியம் - ரமணர் |

ஒரு
நாள் ரமணர் வைராக்கியத்தின் பெருமையை உடன் இருந்தவர்களுக்கு
விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் கூறினார் : நம் நாட்டில் ஒரு பொ¢யவர்
கூறியிருக்கிறார் - இறைவா! தலையணையாக வைத்துக்கொள்ளக் கையைப் படைத்திருக்கிறாய்,
உடலை மறைக்க ஒரு கெளபீனம், உணவைச் சாப்பிட இரு கைகள். எனக்கு வேறு என்ன வேண்டும்?
என் பாக்கியம் தான் என்னே!' - உண்மையிலேயே இத்தகைய மகிழ்ச்சியைப் பெற வேண்டும்
என்று பேரரசர்களும் ஏங்குகிறார்கள். இதற்கு இணையே கிடையாது. இரண்டு விதமான
சூழல்களிலும் நான் இருந்துவிட்டேன். இதற்கும் அதற்கும் உள்ள வேறுபாடு நிச்சயம்
தொ¢கிறது. இந்தப் படுக்கை, சோபா, சுற்றியுள்ள பொருள்கள் ஆகிய எல்லாமே பந்தம் தான்.
"புத்தர் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆவார் இல்லையா?" என்று ஒரு பக்தர் ரமணா¢டம்
வினவினார்.
"ஆம்" என்றார் ரமணர்.
மேலும் தொடர்ந்து, அரண்மனையில் எல்லாவித ஆடம்பரங்களும் இருந்தும் புத்தர் சோகமாகவே
இருந்தார். புத்தா¢ன் சோகத்தைப் போக்க அவரது தந்தை மேலும் ஆடம்பரங்களை அதிகா¢த்தார்.
ஆனால் இவை புத்தரைத் திருப்திப்படுத்தவே இல்லை. நடு இரவில் அவர் குழந்தையையும்
மனைவியையும் விட்டு எங்கோ மறைந்துவிட்டார். ஆறு ஆண்டுகள் கடுந்தவம் பு¡¢ந்து தன்னை
உணர்ந்தார்; உலக நன்மைக்காக பிக்ஷ¤ ஆனார். பிக்ஷ¤ ஆன பின்னரே அவருக்கு ஆனந்தம்
ஏற்பட்டது. அவருக்கு வேறு எது தேவை? என்று பேசினார் ரமணர்.
"பிக்ஷ¤ உடையில் அவர் தமது சொந்த ஊருக்கே வந்தார் இல்லையா?" என்று கேட்டார் ஒரு
பக்தர்.
"ஆம், ஆம்" என்று தொடர்ந்தார் ரமணர். "புத்தர் வருகிறார் என்று கேள்விப்பட்ட
சுத்தோதனர் பட்டத்து யானையை அழகு செய்து முழுப்படையுடன் புத்தரை வரவேற்கக்
காத்திருந்தார். ஆனால் அந்த வழியை விட்டு வேறு சிறிய சந்துகள் வழியாக புத்தர்
உள்ளே நுழைந்தார். மற்ற பிக்ஷ¤க்களை வேறு தெருக்களுக்கு அனுப்பிவிட்டு, தான் வேறு
உருவத்தில் தந்தையிடமே பி¨க்ஷக்குச் சென்றார். சுத்தோதனருக்கு அவரைத் தொ¢யவில்லை.
ஆனால் யசோதரை புத்தரை அடையாளம் கண்டு தன் மகனைத் தந்தையை வணங்கும்படி செய்தாள்;
தானும் புத்தரை வணங்கினாள்.
"சுத்தோதனர் தன் மகனை இந்த பிக்ஷ¤ கோலத்தில் எதிர்பார்க்கவே இல்லை. அவர்
கோபத்துடன், 'வெட்கக்கேடு! இது என்ன உடை? இவ்வளவு பொ¢ய செல்வந்தர் இவ்வாறு வரலாமா?
போதும்" என்று கடிந்து கொண்டார். சினத்தோடு புத்தரை நோக்கினார். 'தந்தைக்கு
இன்னும் அறியாமை நீங்க வில்லையே!' என்று புத்தர் அவரை மேலும் கருணையோடு நோக்கினார்.
புத்தா¢ன் கருணை மிக்க பார்வை சுத்தோதனரை வென்றது. சுத்தோதனர் தோற்றுப் போனார்.
தந்தை மகனின் காலில் விழுந்து பிக்ஷ¤வானார்.
"வைராக்கியம் உடையவனுக்கே வைராக்கியத்தின் வலிமை பு¡¢யும்".
இவ்வாறு கூறும்போது ரமணா¢ன் குரல் தழுதழுத்தது அங்கு ஒரே மெளணம்.
மேலும்>>