பிரஹலாத வரதன்
-கல்யாணபுரம் ஆராவமுதன்
அசுரன் வீட்டிலே ஒரு பக்தன் பிறந்தான். அந்தப் பக்தனின் வார்த்தையை மெய்ப்பிக்க,
ஸ்ரீமந் நாராயணன் எடுத்த அவதாரம் தான் நரசிம்மாவதாரம்.
அவன்தான் பிரஹலாதனுக்காகத் தூணிலிருந்து நரங்கலந்த சிங்கமாக-சிங்கப்பிரானாக பகவான்
ஆவிர்பவித்ததை பாகவதம் 7-வது ஸ்கந்தம் வி¡¢வாகக் கூறுகிறது.
அதைச் சுருக்கமாக இங்கு அனுபவிக்கலாமா?
வைகுந்தத்தின் துவார பாலகர்களாக ஐயன், விஜயன் என்ற இருவர் இருந்தார்கள். ஸனகாதி
முனிவர்களிடம் அபசாரத்தினால் ஏற்பட்ட சாபம் காரணமாக மூன்று பிறவிகளில்
விஷ்ணுவுக்கு விரோதியாக மண்ணுலகிலே பிறந்து, அந்த விஷ்ணுவின் கையாலேயே மடிந்து
சாபம் தீர வேண்டிய நிலை ஏற்படவே, முதல் பிறவியாக அசுர குலத்திலே ஹிரண்யாக்ஷன்,
ஹிரண்யகசிபு என்ற சகோதரர்களாகப் பிறக்கிறார்கள்.
அவர்களுள் ஹிரண்யாக்ஷனைத் திருமால் வராஹ (பன்றி) அவதாரம் எடுத்து வதைத்துவிட்டார்.
அதுமுதல் விஷ்ணுவை எப்படியாவது அழிக்க வேண்டும் எனத் திட்டமிட்ட ஹிரண்யகசிபு
அவரைக் காணாமல், மிகுந்த பலத்தைப் பெற எண்ணி கடுந்தவம் இயற்றினான்.
அவனது தவத்தின் காரணமாக தேவர்கள் பயந்து பிரம்ம தேவனிடம் முறையிட, பிரம்மா
ஹிரண்யகசிபு தவம் செய்கின்ற இடத்தை அடைந்தார்.
பிரம்மாவிடம் ஹிரண்யகசிபு என்ன வரம் கேட்டான்?
தனக்குப் பகலிலோ இரவிலோ, ஆகாசத்திலோ பூமியிலோ, மனிதர்களாலோ விலங்குகளாலோ, எந்த ஆயு
தங்களாலோ மரணம் நேரக் கூடாது என்பதே அவனது வரம். பிரம்மா அனைத்தையும் கொடுத்தார்.
இனி தன்னை யாரும் கொல்ல முடியாது என்று ஹிரண்யகசிபு நினைக்கிறான். ஆனால் பகவானோ
அவன் சிறிதும் எண்ணிப் பார்க்காத வகையில் அவனை வதைத்தார்.
ஹிரண்யகசிபுவின் மைந்தன் பிரஹலாதன் பரம பாகவதோத்தமனாகத் திகழ்ந்தான். கருவிலே
திருவிலாசம் கொண்டு, பிறந்தது முதல் அனவரதமும் ஹா¢யின் நாமத்தையே பூஜித்துக்
கொண்டிருந்தான். ஐந்தாவது வயதில் அவனை ஹிரண்யகசிபு குருகுலத்துக்கு அனுப்பி
வைத்தான். அப்போதிருந்த பாடத் திட்டம் என்ன தொ¢யுமா? 'ஹிரண்யாய நம:' என்றுதான்
எங்கும் பேச்சாக இருக்க வேண்டுமே தவிர, மறந்தும் இறைநாமத்தை யாரும் ஓதலாகாது
என்பதுதான்.
பிரஹலாதனோ திருமாலை உள்ளக் கோயிலில் தியானித்து மகிழ்பவன். அவனை குருநாதர்
ஹிரண்யாய நம: என்று கூறும்படி பணித்தபோது, மடைதிறந்த வெள்ளம் போன்று உள்ளத்தில்
பக்தி பிரவகிக்க, கை குவித்து, மெய் சிலிர்த்து, திருவெட்டெழுத்தை அக மகிழ்ந்து
கூறினான்.
இதைக் கம்பர் தமது பாடலில் எவ்வளவு நயம்படச் சித்தா¢க்கிறார் பாருங்கள்!
"ஓம் நமோ நாராயணாய வென்று ரைத்துளமுருகித்
தானமைந்திரு தடக்கையும் தலைமிசைத் தாங்கிப்
பூ நிறக் கண்கள் புனலுக மயிற்புறம் பொடிப்ப
ஞானநாயகன் இருந்தனன் அந்தணன் நடுங்க"
பிரஹலாதனின் நிலையைக் கம்பர் எப்படி காட்டுகிறார் பாருங்கள்! அக்குழந்தை
உள்ளத்தில் ஏற்பட்ட பக்தி பரவச நிலையைச் சித்திரமாகத் தீட்டும் கம்பர் 'ஞான நாயகன்'
என்று பிரஹலாதன¨க் குறிப்பிடுகிறார்.
தந்தையோ இறைவன் பெயரையே சொல்லக் கூடாது என்கிறான். மகனோ அஞ்சாமல் இறைவனின்
நாமத்தைச் சொல்கிறான்.
எப்படி இருக்கும் அந்த ஆசி¡¢யா¢ன் நிலை நடுங்கினான். உள்ளத்தை மாற்ற இயலவில்லை.
குருநாதன் ஹிரண்யாய நம என்று போதிக்க, பிரஹலாதன் நாராயணாய நம என்று கூற இந்நிலை
தொடர்கிறது.
சில மாதங்கள் சென்றன. ஹிரண்யகசிபு தனது புதல்வன் எந்த அளவு கல்வி கற்றிருக்கிறான்
என்று அறியும் பொருட்டு, குருகுலத்திலிருந்து மகனை அழைத்து வரும்படிச் கூறினான்.
அந்த குரு இது ஏதடா வம்பு? இனி என்ன ஆகுமோ?' என நடுங்கியபடி பிரஹலாதனுடன் அரசன்
முன் சென்றார்.
"காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்
சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய"
இதையே சமஸ்கிருதத்தில் பாகவதத்தில் கூறும்போது பிரஹலாதன் என்ன கூறுவதாக
வர்ணிக்கப்படுகிறது தொ¢யுமா? அசுரர் தலைவா இந்த சமசாரமாகிய பாழுங்கிணற்றி;
வீழ்ந்து வாழ்நாளை வீணடிக் காமல் காடு சென்று A¡¢யைத் தேடப் போகிறேன்"
இறைவனை வெறுக்கும் தந்தையை அப்பா என்று அழைக்கப்பிடிக்காத குழந்தை பிரஹலாதன்
".... ஹா¢யைத் தேடப் போகிறேன்" என்று ஏன் சொல்ல வேண்டும்?
'ஹா¢' என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு 'விஷ்ணு' என்ற ஒரு பொருள். 'சிங்கம்' என்றும்
ஒரு பொருள் இறைவன் சிங்கப்பிரானாக அவதா¢க்க இருப்பதால் இவனது வாயில் ஹா¢ என்று
வந்தது போலும்.
இதைக் கேட்ட ஹிரண்யகசிபுவின் நிலை எப்படி இருந்திருக்கும்? தாங்க முடியாத
கோபத்துடன் ஆசி¡¢யரைத் கடிந்து கொண்டான்.
இனியாகிலும் இது போன்ற சாரமற்ற விஷயத்தைக் குழந்தைக்குப் போதிக்காதே என எச்சா¢த்து
அனுப்பினான். பிரஹலாதன் மீண்டும் குருகுலத்தை அடைந்தான்.
அங்கே பிரஹலாதனை குரு எப்படி கோபிக்கிறார் தொ¢யுமா? "ஏண்டா அசுரகுலம் என்ற சந்தனக்
காட்டில் முள்மரமாக எப்படித் தோன்றினாய்?"
அசுரகுலம் சந்தன மரக்காடாம். அதில் பிரஹலாதன் முள்மரமாக இருக்கிறானாம்.
இதற்கெல்லாம் பயப்படாதவன் அச்சிறுவன்.
(தொடரும்)