menu






 ஆன்மீகம் >> அகிம்ஸை சொற்பொழிவு

பகவான் மகாவீரர் பேரொளிப்பாதையில் அஹிம்சை சொற்பொழிவு

பின்னோக்கிச் செலுத்துங்கள் நீங்கள் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

"ஹோலி" பண்டிகையின்போது பலூனில் தண்ணீரை நிரப்பி, ஆசி¡¢யர் அமரும் நாற்காலி மீது இருந்த திண்டின் கீழ் வைத்து விட்டீர்கள்!

ஆசி¡¢யர் வந்து இருக்கையில் அமர்ந்ததும் அந்த பலூன் வெடித்து பீறிட்டு வெளியே வந்த தண்ணீர் நீரூற்று போல் அல்லவா காட்சியளித்தது! ஏன்? தொடர்ந்து வகுப்பறையில் பொங்கிய சி¡¢ப்பொலி நீரூற்றுக்கு பின்னனி. இசை அல்லவா சேர்த்தது!

இந்த குறும்புத்தனம் கண்டுபிடிக்கப்பட்டு அதற்காக உங்களுக்கு தண்டனை கூட வழங்கப்பட்டது!
இச் சம்பவங்களை நினைவு கூறும்போது இளமைப் பருவ நினைவுகள் இளமையாய் தோன்றுகின்றன!

உங்கள் குழந்தைப் பருவத்தில் இப்படிப்பட்ட சில சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். கடந்துவிட்ட அந்த இனிமையான குழந்தைப் பருவம் இனி மீண்டும் வரப்போவதில்லை. இருப்பினும் நம் நினைவுகளிலும் சிந்தனையிலும் அது தோன்றுகிறது.

இது போன்றுதான் "சித்தநிலை" அடைந்த பகவான் மகாவீரர் இப்போது இப் பிறவியில் திரும்பி வரமுடியாது ஆனால் நம் தியானத்திலும் சிந்தனையிலும் வரமுடியும்.
எனவே இங்கு வேண்டிக்கொள்ளப்பட்டது.

"வே வர்த்தமான மகான் ஜிந விசரே ஹமாரே தியானமே"
ஏன்?.. இன்றைய உலகம் இப்படி கொடூரமாக மாறிவிட்டதென்றால் மரணத்திற்கு ஒரு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது!

சாலையோரத்தில் ஒருவன் இறந்தோ அல்லது இறக்கும் தருவாயிலோ கிடக்கிறாள் என்றால் அவனைப் பார்த்துக்கொண்டே ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் கடந்து விடுகின்றனர். ஆனால் ஒருவர்கூட அவன் இறந்துவிட்டான் என்றால் அவன் குடும்பத்திற்கு செய்தி சொல்லவோ இறக்கும் தருவாயில் இருப்பவனை மருத்துவமனையில் சேர்ப்போம் என்ற உணர்வு கூட இல்லாமல் ஒன்றுமே அங்கு நிகழாததைப் போன்று சென்றுவிடுகின்றனர்.

இன்றைய மனிதனின் உள்ளம் எவ்வளவு அலட்சியமாகிவிட்டது என்றால் மரணச் செய்திகூட இவன் இதயத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

நித்தம் மக்கள் தேனீர் பருகியவாறு செய்தித் தாள்களைப் படிக்கிறார்கள். தேனீர் அருந்திக்கொண்டே "பீகா¡¢ல் வெள்ளம் - வெள்ளத்தில் ஒரு லட்சம்பேர் அழிவு பத்து லட்சம்பேர் வீடிழந்தனர்." என்ற செய்தியினை சர்வசாதாரணமாகப் படிக்கிறார்கள். இந்தக் கோரச் செய்தியினை படிப்போ¡¢ன் கரங்கள் நடுங்குவதில்லை. இவர்களின் நாவிற்கு சுவையூட்டும் தேநீர் கோப்பைகள் கை நழுவி கீழே விழுந்து உடைந்து சிதறுவதும் இல்லை. மாறாக மகிழ்ச்சியுடன் தொடர்ந்து தேநீர் அருந்தியவாறு நண்பர்களிடம் பீகார் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது என்றும், பத்து லட்சம் பேர் வீடு இழந்துள்ளனர் என்றும் செய்தியினை சாதாரணமாகக் கூறுகின்றனர். இந்த அவலச் செய்தியினை நகா¢ல் மகிழ்ச்சியூட்டும் சர்க்கஸ் நிகழ்ச்சியை விமர்சிப்பது போல் பேசுகின்றனர். இந்த கோரச் சம்பவம் இவர்களின் முகத்தில் ஒரு சிறிய கவலைக் கோட்டினை கூட உண்டாக்கவில்லை.

இந்நிகழ்ச்சிகளின் வாயிலாக வெளிப்படும் கருத்து யாதெனில் இன்றைய மனிதனுக்கு மரணத்திற்காக வருந்தும் உணர்வு கூட இல்லாமல் போய்விட்டது என்பதுதான். ஆனால் அந்த இரக்க உணர்வு ஒரு காலத்தில் இருந்தது.

ஆம்! அக்காலத்தில் ஏதாவது ஒரு பகுதியில் பசு இறந்து விட்டால் அப்பகுதிவாழ் மக்கள் அனைவரும் பசுவின் உடல் அகற்றப்படும் வரையில் தண்ணீர் கூட அருந்தமாட்டார்கள் ஆனால் தற்போது? மயானத்தில் கூட மகிழ்ச்சியுடன் தேநீர் தாராளமாகப் பா¢மாறப்படுகின்றதே!

தற்காலத்தில், இறுதி யாத்திரையில் கலந்துகொள்ளும் மக்களைப் பார்த்தால் அவர்கள் திருமண ஊர்வலத்தில் செல்கிறார்களா அல்லது சவ ஊர்வலத்தில் செல்கிறார்களா என்பதை கண்டறிவதே கடினமாகிவிடுகின்றது.

ஏனெனில் மணவிழா ஊர்வலத்தில் காணப்படும் அதே போன்ற மகிழ்ச்சியான பேச்சு, கிண்டல், அரசியல் விமர்சனங்கள், கி¡¢க்கெட் போட்டி காலமாக இருப்பின் பலபேர் கைகளில் காட்சியளிக்கும் டிரான்சிஸ்டர்களும், அதன் வாயிலாக வெளிப்படும் விளையாட்டு விமர்சனங்களையும் கணக்கீடுகளையும் அலசும் விநோதங்களையும் காணலாம்.

இன்றைய உலகிற்கு என்னவாயிற்று? மற்றைய மேற்சொன்ன நிகழ்ச்சிகள் ஒருபுறமிருக்கட்டும் இன்றைய நாகா£க மனிதன் தன் பெற்றோரையே இழந்தாலும் அவன் மூன்று நாட்களுக்குமேல் நினைப்பதில்லையே?

மூன்றாம் நாள், விவசாயி இது விதைக்கும் காலம் என்று கூறி வயல் வெளிக்குச் சென்றுவிடுகிறான். வியாபா¡¢ இதுதான் வியாபாரத்திற்கு ஏற்ற காலம் என்று கடையை திறக்க சென்றுவிடுகிறான். அலுவலகத்தில் பணிபு¡¢பவன், சிறுவிடுப்பெல்லாம் தீர்ந்து விட்டது என்று கூறி அலுவலகத்திற்கு பணிபு¡¢ய சென்று விடுகிறான்.

                                     தொடரும்...

டாக்டர். ஹ¤க்கம்சந்த் பா¡¢ல்
சாஸ்தி¡¢ நியாயதீர்த்தா சாஹித்யரத்னா, எம்.ஏ., பி.எச்.டி.,


முகப்பு பக்கம்
பகவான் பட்ட கடன்
முக்திக்கு வழி
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
எழுந்திரு!
புத்தா¢ன் வைராக்கியம் - ரமணர்
அஞ்சல் வழி சமணக் கல்வி
இயேசு
திருமால் துதி
திருவள்ளுர் ஆண்டு கணக்கிடும் எளியமுறை
108 போற்றிகள்!
மகாவீரர்
அருள் மொழிகள்
பிரஹலாத வரதன்
பகவத் கீதை
அஹிம்சை சொற்பொழிவு
சிவபூஜைப் பலன்கள்
அகிம்ஸை வழங்கும் செய்தி
அறிக : நாம் ஜைனர்களா
இஸ்லாம் போற்றும் கருணை
பிறவிப் பெருங்கடல்
கிருஸ்துவம் போற்றும் கருணை
பலி இடுதல்
சில தகவல்கள்
சமணம் - வள்ளுவம்
உத்திராட்சம் அணிவது ஏன்?