இருபொருள்களின் பெயர்கள்:
இந்த இரு பொருள்கள், அவற்றின் வெவ்வேறு நிலைகள் பற்றி வழங்கும் பெயர்கள் பற்றி
அறிதல் அவசியம். சேதனப் பொருளான ஜீவன் இரு நிலைகளில் காணப்படுகின்றது. ஒன்று பிறவி
உயிர் (மாற்று உயிர் - சம்சா¡¢ ஜீவன்). மற்றது வீட்டுயீர் (முத்தி ஜீவன்-மோட்ச
உயிர்) பிறவி உயிர்கள் உடலுடன் கூடியது. இவ்வுலகெங்கும் மனிதர் முதல் புல் பூண்டு
முதலாக கணக்கற்ற வகையினவாகப் பிறந்து இறந்து வாழ்ந்து வருவன. முத்தி உயிர் பிறவியை
அறுத்து பிறவாநிலையடைந்து சித்த உலகில் மட்டும் தூய தன் இயல்பில் பரமானந்த சுகத்தை
அனுபவித்து வருவன.
இந்த உயிர்ப் பொருளை ஜீவன், ஆன்மா, உயிர், பிராணி, Soul, Spirit முதலான பல
பெயர்களால் பொதுவாக வழங்குகின்றனர். இவற்றில் ஜீவன். உயிர் இரு சொற்களையும் தனி
உயிருக்கும் வழங்குபவர். உடலோடு கூடிய பிறவி உயிரையும் குறிப்பிடுவர். இது சில
சமயம் குழப்பதைத் தருகிறது. (எனவே வரும் பாடங்களில் இக்குழப்பம் தோன்றாமை
இருக்கவேண்டும். எனவே உடலற்ற தனி உயிரை ஜீவன், ஆன்மா, உயிர், Soul என்ற
சொற்களாலும், உடலோடு கூடிய உயிர்களை பிராணி, பிறவி உயிர் (Living Being) என்ற
சொற்களாலும் குறிக்கப்படும்).
சேதனப் பொருளை ஆன்மா என்பதால் அது பற்றிய விஞ்ஞானத்தை அத்யாத்ம விஞ்ஞானம் (Spiritul
Science) என்பர். அது போல் அசேதனப் பொருளான ஜடப் பொருளை பொளதிகம் என்பதால் அது
பற்றிய விஞ்ஞானத்தை பெளதிக விஞ்ஞானம் (Material Science) என்பர். (சேதனப் பொருள்
- Spirit; அசேதனப் பொருள் - Matter). சேதனப் பொருள் நிலைபேறுடையது. பிறப்பு இறப்பு
அற்ற மூலப்பொருள். ஜடப் பொருளான பொளதீகப் பொருள் மாறுதலை உடைய நிலையற்றது. இந்த
ஜடப் பொருளால் ஆகிய மாறுதலை உடைய இந்த உலகை மாயை என வைதீக நூல்கள் குறிப்பிடும்.
இவற்றின் விளக்கங்களை வரும் பாடங்களில் காணலாம்.
உருவும் (மூர்த்தம்), அருவும் (அமூர்த்தம்):
பொருள்கள் உருவமுடையதாகவும், அருவமாகவும் (உருவமற்றது) காணப்படுகின்றன. நமது
ஐம்பொறிகளால் தொடவும், சுவைக்கவும், பார்க்கவும், முகரவும், கேட்கவும் கூடிய
பொருள்களை உருவம் / வடிவம் உடையன என்பர். பொறிகளால் அறிய முடியாதனவற்றை அருவம்
என்பர். ஆன்மா (உயிர்) அருவமானது. உலகில் காணும் பொருள்கள் யாவும் உருவமுடையன.
இந்த உடலும் உருவமுடைய உயி¡¢ல் (அஜீவப்) பொருளே. இந்த உடல் உயிரற்ற ஜடமே,
உருவமுடையதே. உயிர் அருவம் என்பதால் பொறிகளால் அறிய முடியவில்லை. அனைத்து பல்வேறு
பொறிகளை உடைய உயிர்களின் உடல்கள் அனைத்தும் உயிரல்னைவே.
அஜீவப் பொருள்கள் அனைத்தும் உருவமுடையன என்று கூறக்கூடாது. தர்ம, அதர்ம, ஆகாசம்,
காலம் ஆகியன அருவப் பொருள்களே. (அமூர்த்தப் பொருளை அருவம் என்பர் அருவம் எனில்
நிறமில்லாதது என்றே பொருள். வடிவம் இல்லாதது என்று பொருளல்ல. எனவே உருவம்
என்பதற்குப் பொருள் நிறம் - வடிவமன்று)
செயலும், செயலின்மையும்:
செயலுடைமை (புடை பெயர்தல்), செயலின்மை (புடை பெயராமை) என்ற வேறுபாட்டினால் உயிரும்,
உயிரல்லனவும் வேறுபடுகின்றன. இங்கும் அங்கும் அசைதல், போதல் வருதல், சுருங்குதல்
வி¡¢தல், முதலியன செயல்படுதல் எனலாம். உயிருக்கும், உயிரல்லனவற்றிற்கும் இடையே பல
வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில இங்கும் அங்கும் அசைகின்றன. சில அசையாது
எப்போதும் நிலையாக உள்ளன. அசைவது செயலடையது, அசையாதது செயலின்மையன.
கண்களால் காணப்படும் உருவப் பொருள்கள் அசைவன - செயலுடையன. உடலோடு கூடிய பிறவி
உயிர் எல்லாம் செயலுடையனவே. ஆகாயம் எப்போதும் நிலைத்திருப்பது போல் உயி¡¢ல்
பொருள்கள் சில செயலுடையன அல்ல. விளக்கம் பின்னர் காணலாம்.
இனி உயிர் மற்றும் உயி¡¢ல் பொருள்களான புத்கலம், தன்மம், அதன்மம், ஆகாயம், காலம்
ஆகியன பற்றி வி¡¢வாக தனித்தனியே வரும் பாடங்களில் காணலாம்.
குணங்களின் வகை:
பொருள்களில் உள்ள குணங்களை பொது குணங்கள் (சாதாரணம்) சிறப்பு குணங்கள் (விசேஷம்)
என வகைப்படுத்துவர்.
தொடரும்...