menu






 ஆன்மீகம் >> அஞ்சல் வழி சமணக் கல்வி

அஞ்சல் வழி சமணக் கல்வி

இறைவன் யார்?
(ஆசா¡¢யர் அகளங்க தேவர் கூறுகிறார்)

யோ விஸ்வம் வேதவேத்யம் ஜனை ஜலநிதேர்
பங்கிந: பார த்ரஸ் வா
பெளர்வா பர்ய விசுத்தம் வசனமநுபமம்
நிஷ்களங்கம் யதீயம்
தம்வந்தே ஸாதுவந்த்யம் ஸகல குணநிதிம்
த்வஸ்த தோஷத் விஷந்தம்
புத்தம்வா வர்த்தமானம் ஸததள நிலையம்
கேஸவம்வா சிவம் வா.


இம் மூவுலகத்திலும், இதன் புறத்தே உள்ள அலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களின் முக்கால மாற்றங்களையும் அறியும் கேவல ஞான (வாலறிவு)த்தை உடையவர், பிறவிக் கடலின் கரையை அடைந்தவர் (பிறவா நிலையை அடைந்தவர்). அனைத்து உயிர்களின் இடர் தீர்த்து உயர் இன்பமாக்கும் குற்றமும் முரண்பாடும் அற்ற திருமொழியை உடையவர். கனதரர் முதலான துறவிகளாலும், இந்திராதி தேவர்களாலும் வணங்கத்தக்கவர். வரம்பற்ற அறிவு, சுகம், காட்சி ஆற்றல் ஆகிய அனந்த நான்மை விளங்கப் பெற்றவர். பதினெண் குற்றங்களும் இல்லாதவர், இத்தகைய குணங்களுக்கு இருப்பிடமாய் உள்ளவரை நான் இறைவனாகப் போற்றி வணங்குகிறேன். அவர் ஜினனாகவோ, புத்தராகவோ, பிரம்மாவாகவோ, விஷ்ணுவாகவோ, சிவனாகவோ எப்பெயருடையவராயின் இருக்கட்டும்.

நாமும் இறைநிலை அடைவதற்கு உ¡¢ய வழிகாட்டியாய், இறை குணங்களை அடைந்தவரே நம் வழிபாட்டிற்கு¡¢யவர். பெயர் எதுவாக இருப்பினும் இருக்கட்டும் என்கிறார் ஆசா¡¢யர்.

அந்தாதியாரும் என் குணம் யான்பெற எப்பெருமானை இரக்கின்றதே - என்கிறார். அனைத்துயிரடத்தும் இறைகுணம் உள்ளது. ஆனால் அது தி¡¢புற்று, வெளிப்படாது. விதையில் மரம் போல் உள்ளது. அதை அடையத் துணையாவாரே இறைவன்.

மெய்ப்பொருள்கள் (ஷட் திரவியம்)
புலவர் தன்யகுமார் எம்.ஏ., பி. எட்,

2. பொதுவிளக்கம்:

ஜீவன், புற்கலம், தர்மம், அதர்மம், ஆகாயம், காலம் என மெய்ப்பொருள்கள் ஆறு. பொருளில் மாறுதல்கள் (பா¢யாயம் - மாற்றம்) இடையீடு இன்றி எப்போதும் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது. திரவியத்தின் இலக்கணம் சத் அதாவது உளதாம் தன்மை, தானே என்றும் இருப்பது, நிலையானது. அவற்றை யாரும் உண்டாக்கவும் இல்லை. அழிக்கவும் இயலாது. குணங்களின் தொகுப்பே திரவியம். ஒவ்வொரு பொருளிலும், அதன் எல்லா குணங்களும் ஒரே சமயத்தில் காணப்படும். ஒரு பொருளைப் பிற பொருள்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது குணம். ஒவ்வொரு பொருளும் வரம்பற்ற குணங்களை உடையது. ஒருபொருளில் பல குணங்கள் இருந்தாலும் ஒவ்வொரு குணமும் தனித்தனி பிரதேசத்தில் இருப்பதாக எண்ணக் கூடாது. ஒரு குணம் உள்ள இடப்பரப்பிலேயே - ஒரு குணம் உள்ள இடத்திலேயே - அனைத்து குணங்களும் உள்ளன. மாம்பழத்தில் நிறம் சுவை, மணம் முதலான குணங்கள் எல்லா இடத்திலும் இருப்பது போல எனலாம். இவ்வாறு இருந்தாலும் ஒரு குணம் வேறு குணமாக மாறுவதோ, அழிவதோ இல்லை. குணங்களின் தொகுதியாக உள்ளது. சமயந்தோறும் பழய நிலை அழிதலும், புதிய நிலை தோன்றுதலும் ஆன பா¢யாயம் தோற்றமும் அழிவும் உடையன. பொருள்கள் அழியாதன்மை உடையன. எனவே பொருளில் தோற்றம் (உத்பாதம்) அழிவு (வ்யயம்) நிலைபேறு (த்ரெளயம்) ஆகிய முக்கூறுகளும் ஒரே சமயத்தில் காணப்படுகின்றன. பொருள் (திரவியம், வஸ்து, பதார்த்தம்) இயல்பு இவ்வாறு தான் உள்ளன என்பதை சென்ற பாடத்தில் அறிந்து கொண்டீர்கள். பொருள்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.

பா¢யாயங்களே பார்க்கப்படுகின்றன:

உண்மையில் பொருளையோ குணத்தையோ பார்க்க, அனுபவிக்க முடிவதில்லை. பார்ப்பதும் அனுபவிப்பதும் பா¢யாயங்களே, எடுத்துக்காட்டாக மாம்பழத்தைப் பார்க்கிறோம். மாநிறம், சுவை, மணம், ஊறு முதலான குணங்களை உடையது. பச்சை மஞ்சள் முதலியன அதன் குணமாகிய நிறத்தின் பா¢யாயம். இனிப்பு புளிப்பு சுவை குணத்தின் பா¢யாயம், அதுபோல் அதன் மணம் எனும் குணத்தின் பா¢யாயமே ஒருவகை நாற்றம். ஊறு குணத்தின் பா¢யாயமே வன்மை மென்மை. எனவே நாம் மாங்கனியின் குணங்களான நிறம், சுவை, மணம், ஊறு முதலான குணங்களைப் பார்க்காமல் அக்குணங்களின் பா¢யாயங்களையே பார்க்கிறோம். அதாவது நிறமாகிய குணத்தின் ஒரு பா¢யாயமாகிய மஞ்சள், சுவை குணத்தின் இனிப்பு பா¢யாயம். இவ்வாறு நாம் பா¢யாயங்களையே பார்க்கிறோம் இதுபோல் ஒவ்வொன்றையும் காணலாம். பா¢யாயங்கள் நிலையானவை அல்ல. பொருளோ அதன் குணங்களோ அழிவதில்லை. அவை மாறுதலடையும் பா¢யாயங்களின் அடியில் அமைந்த அழியாத நிலைபேறுகளாகும். நமது பார்வைக்கு அல்லது அனுபவத்திற்கு வருவன அனைத்தும் நிலையாமையை (அநித்தியம்) உடையன. இவற்றின் வழி நாம் உய்த்துவணரும் பொருளும், குணமும் நிலையானவை. எனவே பொருள் குணம் மற்றும் பா¢யாயங்களின் தொகுப்பாக இருப்பதால் அது நிலைத்ததாகவும், நிலையாமை உடையதாகவும் இருக்கிறது.

மெய்மையை அறிவோம்:

பொருள்களின் புறத்தோற்றத்தைக் கண்டு உலகம் அவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையற்ற பொய்மையை மெய்மை என எண்ணி உலகம் தன்னையே இழந்து நிற்கிறது. அறவாழ்விற்கு பொருள்களின் உண்மையியல்பை - மெய்மையைத் தேடுதல் இன்றியமையாதது. பொருள்களின் நிலைபேறுடைய அகத் தோற்றமே உண்மையானது. நிலையாமையுடைய புறத்தோற்றம் பொய்யானது. இதையே மாயை, பிரமை, பிரபஞ்சம், மித்யா என்பர். உள்ளிருக்கும் உண்மை பார்வைக்குப் புலப்படுவதில்லை. புறத்தே காண்பதால் பொய்மையை எல்லோரும் அறிவர். காண்பதைத் தனதாகவும். தனதாக ஆக்கவும் முயற்சிக்கின்றனர். எது உண்மையோ, எது தனதாக வேண்டுமோ அதனை தனதாக்கிக் கொள் முயற்சிக்காமையே துன்பத்திற்கு¡¢யது மெய்ப்பொருள்களின் உண்மை இயல்பை அறிந்து, செய்யத்தகுவன. தகாதனவற்றைக் கண்டறிந்து, இன்பத்தையும் அமைதியையும் நாடி அறநெறி போற்றவேண்டும்.

இருவகைப் பொருள்கள்:

உலகில் எண்ணிக்கையற்ற / வரம்பற்ற பொருள்கள் காணப்படுகின்றன. மனிதர், விலங்கு, பறவை, மரம், செடிகொடி, கல், மண், நீர், நெருப்பு, காற்று மேலும் அறிய முடியாத பல பொருள்கள் உள்ளன. உண்மையில் ஆய்ந்து பார்ப்போமானால் இங்கே பல இல்லையென அறிய முடியும். உண்மையில் இருவகைப் பொருள்களே உள்ளன. அவை உயிரும் (ஜீவன்), உயிரல்லன (அஜீவன்)வும் ஆகும்.

அறிதலும் பார்த்தலும் (ஞான தா¢ஸனம்) உடைய பொருள் உயிர். இந்த உணர்வுடைய பொருளைச் சேதனம் என்பர். அறிதல் பார்த்தல் உணர்வற்ற பொருளை அசேதனம் (ஜடம்) என்பர். எனவே உலகில் உயிரும் உயிர் அல்லனவுமான இருவகைப் பொருள்களே உள்ளன.

                                        தொடரும்...


முகப்பு பக்கம்
பகவான் பட்ட கடன்
முக்திக்கு வழி
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
எழுந்திரு!
புத்தா¢ன் வைராக்கியம் - ரமணர்
அஞ்சல் வழி சமணக் கல்வி
இயேசு
திருமால் துதி
திருவள்ளுர் ஆண்டு கணக்கிடும் எளியமுறை
108 போற்றிகள்!
மகாவீரர்
அருள் மொழிகள்
பிரஹலாத வரதன்
பகவத் கீதை
அஹிம்சை சொற்பொழிவு
சிவபூஜைப் பலன்கள்
அகிம்ஸை வழங்கும் செய்தி
அறிக : நாம் ஜைனர்களா
இஸ்லாம் போற்றும் கருணை
பிறவிப் பெருங்கடல்
கிருஸ்துவம் போற்றும் கருணை
பலி இடுதல்
சில தகவல்கள்
சமணம் - வள்ளுவம்
உத்திராட்சம் அணிவது ஏன்?