அகிம்ஸை வழங்கும் செய்தி?
அலங்கார பொருட்களுக்கு ஆருயிர்கள் கொல்லப்படுகின்றன!
கடைக்குச் சென்று உயிர்க் கொலைக்கு காசு தருகிறார்கள்!
தாவர உணவாளர்களே! சற்று கண்திறந்து பா¡£ர்!
தாவர உணவாளர் முட்டை முதலானவற்றை உண்ணுவதில்லை. இம்சையால் விளைவன எதனையும்
அவர்கள் உண்பதில்லை. ஆனால், இன்றைய விஞ்ஞான உலகில், அவர்கள் அன்றாட வாழ்வில்
பயன்படுத்தும் பல பொருள்களில் விலங்குளைக் கொன்று அவற்றின் உடல் கூறுகள்
சேர்க்கப்படுகின்றன என்பதனை அறியாது இருக்கின்றனர் அதனால் அந்த விலங்குகளின்
பெரும் கொலையில் தாங்களும் பங்கு பெறுகின்றனர். உடன்படுகின்றனர். இந்த நிலையில்
தாவர உணவாளர் என்ன செய்ய வேண்டும்?
உணவுக்காகவும் வேறுவேறு வகைக்காகவும் கடைகளில் பொருளை வாங்கும் போது அவர்கள்
மிகவும் விழிப்பாக இருந்து நாம் பயன்படுத்தும் பொருள்கள் விலங்குகளைக் கொன்றோ
வதைத்தோ உருவானதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
விலங்குகள் தோல் கொண்டு செய்யப்படும் பெல்ட், பர்ஸ், ஷீ, செருப்பு, பெட்டி
முதலானவைகளையும் பயன்படுத்துதல் கூடாது. இப்பொருள்களை உருவாக்க ஆயிரக்கணக்கான
விலங்குகள் கொல்லப்படுகின்றன. உடம்பு சோப், வனஸ்பதி எ¦ண்ணெய், ரொட்டி முதலானவற்றை
தயா¡¢க்க பல உயிர்கள் கொல்லப்பட்டு, அவற்றின் கொழுப்பு முதலியன
பயன்படுத்தப்படுகின்றன.
பட்டு, அரக்கு போன்றவை தயாராக ஆயிரக்கணக்கான புழுக்கள் பூச்சிகள்
கொல்லப்படுகின்றன. வெள்ளிரேக் தயா¡¢க்க ஆட்டுக்குட்டிகளை கொன்று அதன் மெல்லிய
தோல்களைப் பயன்படுத்துகின்றனர். மணமுள்ள வெற்றிலை சுண்ணாம்பு தயா¡¢க்க கடல்வாழ்
பிராணிகளிலிருந்து ஒரு வகை திரவியம் சேர்க்கின்றனர். கருப்பு உப்பு தயா¡¢க்க தோல்
ஊறிய நீர் பயன்படுத்துகின்றனர். இந்த உப்பே கடைகளில் விற்கப்படுகிறது. பிஸ்கட்,
அ¡¢சி மாவு, மைதா மாவு கொண்டு செய்யப்படும் பண்டங்கள் இவற்றில் ஆட்டு குடல்,
விலங்குகளின் நரம்புகளினால் ஆன ஒருவகை மாவு (ல்ஹே) சேர்க்கப்படுகிறது. போதைக்காக
பாக்கு மசாலாவில் பல்லியின் வாலை வெட்டிச் சேர்க்கின்றனர். சென்ட்டின் நல்ல
வாசனைக்கு தேள்கள் கொல்லப்பட்டு அவற்றின் உடல்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.
மருந்து, மாத்திரை போன்றவற்றில் கூட எலும்பு தூள்கள் சேர்க்கப்டுகின்றன. ஐஸ்கி¡£ம்,
கேக், சாக்லேட், பற்பசை, பற்பொடி போன்றவை தயா¡¢ப்பதிலும் இதே நிலை காணப்படுகிறது.
தேன் கூட்டை லிப்ஸ்டிக்கில் பயன்படுத்த ஆயிரக்கணக்கான தேனீக்கள் கொல்லப்படுகின்றன.
க்ரீம், லிப்ஸ்டிகில் திமிங்கிலத்தின் கொழுப்பு சேர்க்கப்படுகிறது. முயலின் கண்
குருடாக்கப்பட்டு பல உருவாக ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் கொல்லப்படுகின்றன.
பேன் கொல்லி எண்ணையால் தலையில் புற்றுநோய் வருகிறது. இந்த அநீதியான கொலைகளுக்கு
நாம் துணை போகலாமா?
நாம் என்ன செய்ய வேண்டும்?
கடைப்பொருளை வாங்கும் போது அதன் தரம் பற்றியும் அது உருவாகப் பயன்பட்ட மூலப்பொருள்
பற்றியும் அறிய நமக்கு சட்டப்படி உ¡¢மை உண்டு. அதனால், பொருளை வாங்கும் முன்
உயிர்க்கொலையால் விளையாத பொருள்களை தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும்.