menu






 ஆன்மீகம் >> 108 போற்றிகள்!

ஆனைமுகத்தோன், அண்ணாமலையான், ஆறுமுகன் போற்றிகள்!


 

ஆனை முகத்தவன் தாள் பணிந்தேன்!
படியம்பட்டு தஞ்சியம்மன் தாள் பணிந்தேன்!


1. ஓம் ஆனைமுகத்து ஐங்கரன் தாள் போற்றி ஓம்!
2. ஓம் திருவண்ணாமலையானே போற்றி ஓம்!
3. ஓம் ஆதிநாராயணனே போற்றி ஓம்!
4. ஓம் வேங்கிடமலையானே போற்றி ஓம்!
5. ஓம் ஐயப்ப சுவாமியே போற்றி ஓம்!
6. ஓம் ஆனந்தவிநாயகனே போற்றி ஓம்!
7. ஓம் ஞானகந்தர விநாயகனே போற்றி ஓம்!
8. ஓம் பெரும்பூத விநாயகனே போற்றி ஓம்!
9. ஓம் பொள்ளாப் பிள்ளையார் விநாயகனே போற்றி ஓம்!
10. ஓம் செந்தில் விநாயகனே போற்றி ஓம்!
11. ஓம் அரசரடி கற்பக விநாயகனே போற்றி ஓம்!
12. ஓம் பாவாடை மூர்த்தி விநாயகனே போற்றி ஓம்!
13. ஓம் மூர்த்தி விநாயகனே போற்றி ஓம்!
14. ஓம் சக்தி விநாயகனே போற்றி ஓம்!
15. ஓம் கற்பக விநாயகனே போற்றி ஓம்!
16. ஓம் மாயசக்தி விநாயகனே போற்றி ஓம்!
17. ஓம் மாப்பிள்ளை விநாயகனே போற்றி ஓம்!
18. ஓம் பாலவிநாயகனே போற்றி ஓம்!
19. ஓம் நர்த்தன விநாயகனேபோற்றி ஓம்!
20. ஓம் சந்தான விநாயகனே போற்றி ஓம்!
21. ஓம் சித்தி புத்தி விநாயகனே போற்றி ஓம்!
22. ஓம் வரசக்தி விநாயகனே போற்றி ஓம்!
23. ஓம் வலம்பு¡¢ விநாயகனே போற்றி ஓம்!
24. ஓம் முக்குருனி விநாயகனே போற்றி ஓம்!
25. ஓம் ஏலேலசிங்க விநாயகனே போற்றி ஓம்!
26. ஓம் சங்குபாணி விநாயகனே போற்றி ஓம்!
27. ஓம் கொக்களத்தி விநாயகனே போற்றி ஓம்!
28. ஓம் செளபாக்ய விநாயகனே போற்றி ஓம்!
29. ஓம் வெற்றி விநாயகனே போற்றி ஓம்!
30. ஓம் செல்வ விநாயகனே போற்றி ஓம்!
31. ஓம் துந்துபி விநாயகனே போற்றி ஓம்!
32. ஓம் இடுக்குப் பிள்ளையார் விநாயகனே போற்றி ஓம்!
33. ஓம் சர்வசித்தி விநாயகனே போற்றி ஓம்!
34. ஓம் மங்கள விநாயகனே போற்றி ஓம்!
35. ஓம் இரட்டை பிள்ளையார் விநாயகனே போற்றி ஓம்!
36. ஓம் தில்லை விநாயகனே போற்றி ஓம்!
37. ஓம் ஆதி விநாயகனே போற்றி ஓம்!
38. ஓம் விளக்கொளி விநாயகனே போற்றி ஓம்!
39. ஓம் ஞானச்சுடர் விநாயகனே போற்றி ஓம்!
40. ஓம் செல்லப் பிள்ளையார் விநாயகனே போற்றி ஓம்!
41. ஓம் முப்பெருந்தேவியரே போற்றி ஓம்!
42. ஓம் படியம்பட்டு தஞ்சியம்மனே போற்றி ஓம்!
43. ஓம் ஊத்துக்காடு எல்லையம்மனே போற்றி ஓம்!
44. ஓம் காஞ்சி காமாட்சியே போற்றி ஓம்!
45. ஓம் காசி விசாலட்சியே போற்றி ஓம்!
46. ஓம் மதுரை மீனாட்சியே போற்றி ஓம்!
47. ஓம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியே போற்றி ஓம்!
48. ஓம் மோரணம் பொன்னியம்மையே போற்றி ஓம்!
49. ஓம் முக்கூர் பாஞ்சாலியம்மனே போற்றி ஓம்!
50. ஓம் தண்டரை பச்சையம்மனே போற்றி ஓம்!
51. ஓம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வா¢யே போற்றி ஓம்!
52. ஓம் படவேடு இரேணுகா தேவியே போற்றி ஓம்!
53. ஓம் வாழப்பந்தல்வாழ் பச்சியம்மனே போற்றி ஓம்!
54. ஓம் நமசிவாயனே போற்றி ஓம்!
55. ஓம் செய்யாறுறையும் வேதபு¡£ஸ்வரனே போற்றி ஓம்!
56. ஓம் காளத்தி அப்பனே போற்றி ஓம்!
57. ஓம் உமையொரு பாகனே போற்றி ஓம்!
58. ஓம் காஞ்சி ஏகாம்பரநாதனே போற்றி ஓம்!
59. ஓம் திருப்பெருந்துறை உறைசிவனே போற்றி ஓம்!
60. ஓம் தில்லை நடராசனே போற்றி ஓம்!
61. ஓம் மறையவனும் மாலும் காணா மாமகனே போற்றி ஓம்!
62. ஓம் நால்வர் போற்றிய நற்பொருளே போற்றி ஓம்!
63. ஓம் மாணிக்கவாசகனின் மாணிக்க மணியே போற்றி ஓம்!
64. ஓம் முக்கண்ணுடைய முதல்வனே போற்றி ஓம்!
65. ஓம் கயிலைமலையானே போற்றி ஓம்!
66. ஓம் கனல்மலையானே போற்றி ஓம்!
67. ஓம் தி¡¢புரம் எ¡¢த்த சிவனே போற்றி ஓம்!
68. ஓம் மலைமகள் மார்பனே போற்றி ஓம்!
69. ஓம் கடலைப் பொடியுடைய பெம்மானே போற்றி ஓம்!
70. ஓம் வேலூர் ஜலகண்டேஸ்வரனே போற்றி ஓம்!
71. ஓம் பிறைசூடிய பெருமானே போற்றி ஓம்!
72. ஓம் செய்யாறுறையும் பட்சீசுவரனே போற்றி ஓம்!
73. ஓம் சொக்க நாதப் பெருமானே போற்றி ஓம்!
74. ஓம் அங்கயற்கண்ணிக்கருளிய ஆலவாய் அழகனே
போற்றி ஓம்!
75. ஓம் திருத்தணி திருமுருகனே போற்றி ஓம்!
76. ஓம் இரத்தினகி¡¢வாழ் பால முருகனே போற்றி ஓம்!
77. ஓம் பழனி மலைவாழ் தண்டபானியே போற்றி ஓம்!
78. ஓம் திருச்செந்தூர் வாழ்வேலவனே போற்றி ஓம்!
79. ஓம் பழமுதிர்ச்சோலை பரமனே போற்றி ஓம்!
80. ஓம் ஆவினன் குடிவாழ் அன்பனே போற்றி ஓம்!
81. ஓம் முருகார் முருகனே போற்றி ஓம்!
82. ஓம் அழகார் ஆறுமுகனே போற்றி ஓம்!
83. ஓம் சூரனை சூரையாடிய கந்தரனே போற்றி ஓம்!
84. ஓம் அப்பனுக்குப்பாடம் சொன்னசுப்பனே போற்றி ஓம்!
85. ஓம் வள்ளிக்கு வாழ்வளித்த வள்ளலே போற்றி ஓம்!
86. ஓம் தெய்வயானை தலைவா போற்றி ஓம்!
87. ஓம் சக்தியிடம் சக்திவேல்வாங்கியோய் போற்றி ஓம்!
88. ஓம் வடிவேல் முருகனே போற்றி ஓம்!
89. ஓம் வெற்றிவேல் முருகனே போற்றி ஓம்!
90. ஓம் திருப்பரங் குன்றம் வாழ் குகனே போற்றி ஓம்!
91. ஓம் சுவாமிமலைவாழ் சுவாமி நாதனே போற்றி ஓம்!
92. ஓம் மருதமலை வாழ் மாசறுமணியே போற்றி ஓம்!
93. ஓம் மயிலம் வாழ் முருகனே போற்றி ஓம்!
94. ஓம் குமரகோட்டத் துறையும் குகனே போற்றி ஓம்!
95. ஓம் விறைமலர்ச் சூடிய விசாகனே போற்றி ஓம்!
96. ஓம் வல்லக்கோட்டை வாழ் வள்ளலே போற்றி ஓம்!
97. ஓம் கார்த்திகை கன்னியர் போற்றிட்ட கார்த்திகேயனே
போற்றி ஓம்!
98. ஓம் கதிர்வேலா போற்றி ஓம்!
99. ஓம் கடம்பநாதனே போற்றி ஓம்!
100. ஓம் கந்த பெருமானே போற்றி ஓம்!
101. ஓம் குன்று தோராடும் குமரனே போற்றி ஓம்!
102. ஓம் செவியீராறுடைச் செம்மால் போற்றி ஓம்!
103. ஓம் அருணகி¡¢க்கு அருள் அமல போற்றி ஓம்!
104. ஓம் நக்கீரற்கருள் நாதா போற்றி ஓம்!
105. ஓம் சங்கத் தமிழ் சாற்றிய சண்முக போற்றி ஓம்!
106. ஓம் குமரகுரபரற் கருளினை போற்றி ஓம்!
107. ஓம் சேவற்கொடியுடையோனே போற்றி ஓம்!
108. ஓம் வாயுமகன் ஆஞ்சநேயனே போற்றி ஓம்!
ஓம் பல்வகை வளனும் பணித்தருள் போற்றி ஓம்!

இறையருட் கவிஞர்
ஆசி¡¢யர் ச. கார்த்திகேயன், பி.ஏ.

 


முகப்பு பக்கம்
பகவான் பட்ட கடன்
முக்திக்கு வழி
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
எழுந்திரு!
புத்தா¢ன் வைராக்கியம் - ரமணர்
அஞ்சல் வழி சமணக் கல்வி
இயேசு
திருமால் துதி
திருவள்ளுர் ஆண்டு கணக்கிடும் எளியமுறை
108 போற்றிகள்!
மகாவீரர்
அருள் மொழிகள்
பிரஹலாத வரதன்
பகவத் கீதை
அஹிம்சை சொற்பொழிவு
சிவபூஜைப் பலன்கள்
அகிம்ஸை வழங்கும் செய்தி
அறிக : நாம் ஜைனர்களா
இஸ்லாம் போற்றும் கருணை
பிறவிப் பெருங்கடல்
கிருஸ்துவம் போற்றும் கருணை
பலி இடுதல்
சில தகவல்கள்
சமணம் - வள்ளுவம்
உத்திராட்சம் அணிவது ஏன்?